காவிரியை சமாதானப்படுத்தும் விஜய்.. யமுனாவை வெறுக்கும் நவீன், ராகினிக்கு விழப்போகும் அடி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், இனம் இனத்தோடு தான் சேரும் என்று சொல்வதற்கு ஏற்ப பசுபதி மற்றும் அஜய் குடும்பம் ஒன்று சேர்ந்து விட்டது. அதாவது ராகினி நினைத்தபடி காவிரியை பழி வாங்குவதற்காக பகடைக்காயாக அஜய்யை கல்யாணம் பண்ணி விட்டார். இது தெரிந்தும் விஜய், காவேரியிடம் எதுவும் சொல்லாமல் மறைத்து விடுகிறார்.

காரணம் கொடைக்கானலில் இருக்கும் காவிரி சந்தோஷமாக இருக்கட்டும் என்று. ஆனால் தேடிப் போய் ராகினி மற்றும் அஜய் தம்பதிகளாக காவிரி முன் நின்று வெறுப்பேற்றுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பசுபதி இந்த கொடைக்கானலில் என்னுடைய மகள் கல்யாணத்தை திருவிழா மாதிரி நடத்தப் போகிறேன். எதை நீ தடுக்கணும் என்று நினைத்தாயோ அதை நான் வெற்றிகரமாக செய்து முடித்தேன் என்று பசுபதி ஆர்ப்பரிக்கிறார்.

யமுனாவை வெறுக்கும் நவீன்

இதனால் அப்செட்டில் இருக்கும் காவிரியை சமாதானப்படுத்தும் விதமாக விஜய், பசுபதி மற்றும் ராகினியால் உனக்கும் குடும்பத்துக்கும் எந்த பிரச்சினையும் வராது. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் நம்முடன் வீட்டில் இருக்கணுமா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் பொறுப்பை என்னிடம் தான் இருக்கிறது. அதனால் இதைப் பற்றி யோசிக்காமல் விடு பார்த்துக்கலாம் என்று சொல்லிவிடுகிறார்.

இதனை தொடர்ந்து யமுனாவை பார்க்கும் நவீன், நீ என் இந்த மாதிரி பொய் சொன்னாய். உன்னுடைய அக்கா காவிரி வாழ்க்கையை பற்றி கொஞ்சமாவது யோசித்துப் பார்த்தாயா? அந்த வீட்டில் ராகினி போனால் காவேரிக்கு நரகமாக தானே எல்லாம் அமையும். நீ ஏன் இந்த மாதிரி வேலையை பார்த்தாய் என்று கோபமாக பேசுகிறார். அதற்கு யமுனா தேவையில்லாத காரணங்களை சொல்லி சமாளிக்க பார்க்கிறார்.

ஆனாலும் நவீன் நீ பண்ணியது தவறுதான் என்று கோபத்துடன் இனி என்னிடம் பேச வேண்டாம் என்று சொல்லி போய் விடுகிறார். இதையெல்லாம் தொடர்ந்து காவிரியை சமாதானப்படுத்த விஜய் சொன்னதை நிறைவேற்றினால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது அஜய் மற்றும் ராகினியை வீட்டிற்குள் சேர்க்காமல் தனியாக இருக்க சொல்ல வேண்டும்.

அப்பொழுது தான் அஜய்யை கல்யாணம் பண்ணது வேஸ்ட் என்று பீல் பண்ணி காவிரி கிட்ட ராகினி நெருங்க முடியாத அளவிற்கு பெரிய அடியாக இருக்கும். அடுத்ததாக பசுபதி கொடுத்த பணத்தை குமரன் தான் தொலைத்தார் என்ற உண்மை கங்காவிற்கு தெரிய வரப்போகிறது. தெரிந்ததும் காவிரியை பார்த்து குற்ற உணர்ச்சியில் கங்கா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பாசத்தை கொட்டி காவிரிக்கு சப்போர்ட்டாக நிற்கப் போகிறார்.

காவேரி விஜய் பற்றி சுவாரசியமான விஷயங்கள்

- Advertisement -