காலை வாரிவிட்ட விஜய்.. நான் இருக்கிறேன் என கைதூக்கி விட்ட தனுஷ்

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வருகின்ற ஜனவரி மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவிருக்கிறார். அதேபோல் தனுஷும் கையில் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய நூறாவது படத்தில் பெரிய நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். இதற்காக பல டாப் நடிகர்களை அவர் அணுகி உள்ளார்.

Also Read : 100-வது படத்தில் நீங்க தான் நடிக்கணும்.. ஆசை ஆசையாய் வந்த பிரபலத்தை விரட்டி அடித்த தனுஷ்

அதாவது தமிழ் சினிமாவில் முக்கியமான தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஆர் பி சவுத்ரி. இவர் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். மேலும் ஆர் பி சவுத்ரி நடிகர் ஜீவாவின் தந்தை ஆவார். இப்போது ஜீவாவின் வரலாறு முக்கியம் என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

ஆர் பி சவுத்ரி நிறைய வெற்றி படங்களை கொடுத்து இன்றும் ஒரு தூண் போல் நிற்கிறார். தன்னுடைய நூறாவது படத்தை தயாரிக்க உள்ளார். இதில் பெரிய ஹீரோவை நடிக்க வைக்கலாம் என்ற தளபதி விஜய் இடம் சவுத்ரி பேசியுள்ளார். ஆனால் நான் இப்போது ரொம்ப பிசி என விஜய் மறுத்து விட்டாராம்.

Also Read : எலும்பா, ஆமை என தனுஷ், அஜித்தை கலாய்த்த பிரபலம்.. பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய இளம் நடிகர்

இந்நிலையில் விஜய் காலை வாரிவிட்ட நிலையில் தனுஷ் இடம் போய் உள்ளார். நான் இருக்கிறேன் என்னை நம்பலாம் என தனுஷ் வாக்கு கொடுத்துள்ளாராம். ஆகையால் சவுத்ரியின் 100 வது படத்தில் தனுஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் மிகப்பெரிய தயாரிப்பாளரான சவுத்ரி தன்னை சந்திப்பதை விட நானே அவரை போய் சந்திக்கிறேன் என்று தனுஷ் சென்றுள்ளார். தனுஷின் இந்த பண்பை பார்த்து சவுத்ரி ஆச்சரியப்பட்டுள்ளார். மேலும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Also Read : காஸ்ட்லி ஷூ உடன் வலம் வரும் தனுஷ்.. நீண்ட தாடியுடன் கேப்டன் மில்லர் படத்தின் நியூ லுக்

Next Story

- Advertisement -