டென்ஷனில் இருக்கும் விஜய்.. சைடு கேப்பில் அவர் ரூமுக்கு போய் மணிக்கணக்கில் கூல் செய்த சம்பவம்

விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல மாதங்களுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் நீண்டு கொண்டே இருக்கிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பதற்காக திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் இப்போது வம்சி இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் வாரிசு பட சூட்டிங் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக தளபதி 67 திரைப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு தாமதம் ஆகிறது.

Also read:விஜய்யுடன் கூட்டணி போட நடையாய் நடந்த இயக்குனர்.. தளபதியை இம்ப்ரஸ் செய்த கதாபாத்திரம்

இந்தப் படத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைகளையும் லோகேஷ் கனகராஜ் பக்காவாக செய்து வைத்திருக்கிறார். மேலும் காஞ்சிபுரம் அருகில் கூட இந்த படப்பிடிப்பிற்கான பிரம்மாண்டம் செட் எல்லாம் போடப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது. விஜய் வந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வது மட்டும்தான் பாக்கி இருக்கிறது.

அந்த அளவுக்கு லோகேஷ் அனைத்து வேலைகளையும் பக்காவாக செய்து முடித்துள்ளார். ஆனால் வம்சி இப்படி ஒரு புது குண்டை போட்டு இருப்பது லோகேஷ் உட்பட பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் அதிக டென்ஷன் ஆனது விஜய் மட்டும் தான். இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also read:வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் ரிப்போர்ட்.. இரண்டு மடங்கு அதிகம் சம்பளம் வாங்கிய விஜய்

தற்போது அந்த படத்தின் ஷூட்டிங் ஈசிஆரில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் மொத்த பட குழுவும் அங்கு தங்கி இருந்து அனைத்து வேலைகளையும் பார்த்து வருகிறது. அங்கு விஜய் தங்கி இருக்கும் அதே ஹோட்டலில் தான் நடிகர் ஷாருக்கானும் தங்கி இருக்கிறாராம்.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பும் அங்கு தான் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதற்காக சென்னை வந்துள்ள ஷாருக்கானை விஜய் சந்தித்து பேசி இருக்கிறார். மணி கணக்கில் அவர்கள் இருவரும் ரூமில் பேசிக் கொண்டிருந்தார்களாம். ஏற்கனவே இந்த படத்தில் விஜய் ஒரு கௌரவ தோற்றத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு அதற்கான அறிகுறி தான் என்றும் பேசப்பட்டு வருகிறது.

Also read:விஜய்யுடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தளபதி-67 சம்பவம் பெருசா இருக்கும் போல லோகேஷ் ப்ரோ

Next Story

- Advertisement -