என் புருஷனுக்கு விஜய் ஓட்டுப் போடுவாரா.. மனைவி ப்ரீத்தி கொடுத்த பதில்

சீரியல் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் இவரது கேரக்டருக்கு பிக் பாஸ் வீடியோ செட் ஆகாது என பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.

ஆனால் என்னால் மக்கள் மனதை ஈசியாக வேலை முடியும் என்பதை நாளுக்கு நாள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் நாளுக்கு நாள் இவருக்கு ரசிகர்களிடம் பேராதரவு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுக்கும்போது தளபதி விஜய் தன்னுடைய நண்பனும் என்னுடைய கணவருமான சஞ்சீவி பிக்பாஸில் சப்போர்ட் செய்து வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சப்போர்ட் என்றால் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எப்படியாவது சஞ்சீவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது இல்லை. சஞ்சீவி வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பிக்பாஸில் ஓட்டு போடுவாராம். கடந்த வாரம் கூட போட்டதாக சொல்லியுள்ளார்.

விஜய்யும் சஞ்சீவ்வும் பால்ய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தன்னுடைய நண்பர் தன்னுடைய கேரியரின் அடுத்த கட்டத்திற்கு செல்ல இருக்கும் நிலையில் அவருக்கு சப்போர்ட் செய்வது தானே நல்ல நண்பர். விஜய் மட்டுமல்லாது விஜய் குடும்பத்தினர் அனைவரும் சஞ்சீவி வெற்றி பெறவேண்டுமென ஹாட்ஸ்டார் தளத்தில் ஓட்டு போட்டு வருகிறார்களாம்.

போகிற போக்கை பார்த்தால் பிக்பாஸ் முடிந்த பின்னர் விஜய் டிவி சீரியல்களில் ஹீரோவாக சஞ்சீவ் நடிக்கவும் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம். சன் டிவி சீரியல்களில் நடித்தபோது அவருக்கு வரவேற்பு கிடைத்து நிலையில் விஜய் டிவிக்கு சென்று விட்டால் வேற லெவல் என்று கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் விஜய் டிவி அவரை என்ன செய்கிறது என்று.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்