முதலுக்கே மோசம்.. வெங்கட் பிரபு மீது கொல காண்டில் விஜய்

Vijay-Venkat Prabhu: வெங்கட் பிரபு, விஜய் கூட்டணி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் எப்போது சேர்ந்து படம் பண்ணுவார்கள் என ரசிகர்களும் வருடக்கணக்கில் காத்திருந்தனர். அதை நினைவாக்கும் பொருட்டு தற்போது The Greatest Of All Time உருவாகிக் கொண்டிருக்கிறது.

அதில் தான் தற்போது ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது இப்படத்தின் தலைப்பு ஒட்டு மொத்த ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை. முக்கியமாக பி, சி சென்டர் ஆடியன்ஸ்க்கு டைட்டில் பிடிக்கவும் இல்லை புரியவும் இல்லை. தமிழ் தலைப்பை தான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் படகுழு இப்படி ஒரு டைட்டிலை தேர்ந்தெடுத்து இருப்பது முதலுக்கே மோசமாகியுள்ளது. அதாவது இந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் தயாரிப்பு தரப்புக்கு வந்து கொண்டிருக்கிறதாம். எப்போதுமே டாப் ஹீரோக்களின் படங்கள் பூஜை போடும்போதே வியாபாரம் ஆகிவிடும்.

Also read: விஜய் அஜித் இல்லனா என்ன நடக்கும்.. கடைசியில் அசிங்கப்பட்டு நின்ன உச்ச நட்சத்திரங்கள்

அதன்படி இப்படத்திற்கும் நல்ல பிசினஸ் பேசப்பட்டு வந்தது. ஆனால் டைட்டில் அறிவிப்பை பார்த்ததும் அடிமாட்டு விலைக்கு படத்தை கேட்கிறார்களாம். ஒன்று படத்தின் தலைப்பை மாற்றுங்கள். இல்லையென்றால் சாதாரண விலைக்கு படத்தை வாங்கிக் கொள்கிறோம் என விநியோகஸ்தர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதை எதிர்பார்க்காத விஜய் இப்போது வெங்கட் பிரபு மீது கொல காண்டில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் விஜய் இப்போது அரசியல் நகர்வுக்கான வேலைகளை ஸ்ட்ராங்காக போட்டு வருகிறார்.

இந்த நேரத்தில் ஆங்கிலத்தில் படத் தலைப்பு வைத்திருப்பது அவருக்கு பின்னடைவாக அமையும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. அதற்கேற்றார் போல் தற்போது வியாபாரமும் சூடு பிடிக்கவில்லை. இதனால் விஜய் அதிருப்தியில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.

Also read: ரஜினி, கமலுக்கு முடிவு கட்டிய விஜய்.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆக மாறப் போகுது வெயிட் அண்ட் சீ