விஜய் அஜித் இல்லனா என்ன நடக்கும்.. கடைசியில் அசிங்கப்பட்டு நின்ன உச்ச நட்சத்திரங்கள்

What will happen if Vijay is not Ajith: எப்போதுமே மூத்த நடிகர்களுக்கு மக்களிடத்தில் அதிக வரவேற்பு கிடைப்பது வழக்கம் தான். அதிலும் உச்ச நட்சத்திரங்களாக தற்போது இருக்கும் ரஜினி மற்றும் கமல் என்றால் ரசிகர்கள் எக்கச்சக்கமாக இருப்பார்கள். இதனாலையே பெரும்பாலும் இடத்தில் இவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முதல் மரியாதை என்கிற அளவிற்கு இவர்களை கௌரவிப்பார்கள்.

அப்படித்தான் இரு தினங்களுக்கு முன் நடந்த மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூறாவது கலை நிகழ்ச்சி விழாவிற்கு ரஜினி கமலை அழைக்கும் விதமாக அழைப்பிதழில் இவர்களுடைய பெயர்களை போட்டு நேரடியாக அழைப்பு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் கொஞ்சம் கூட விஜய் அஜித்துக்கு கொடுக்காததால் அவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லையாம்.

அதாவது கலைஞர் கருணாநிதிக்கு நடத்திய நிகழ்ச்சியை யாரும் இல்லாமல் நடத்தி முடித்து இருக்கிறார்கள். வெறும் ஆயிரம் பேர் மட்டும் தான் வந்திருக்கிறார்களாம். இதற்கு காரணம் அஜித் விஜய் வராமல் போனதுதானாம். இவர்கள் சென்னைக்குள் இருந்து கொண்டே வராமல் இருந்ததற்கு முறைப்படி அழைப்பு கொடுக்கவில்லை. அத்துடன் பத்திரிகையிலும் இவர்கள் பெயரை போடவில்லை என்பதால்.

Also read: குளிர் ஜுரத்தை சுட்டெரித்த சூரியன்.. மாஸ் ஹீரோவை கதிகலங்க செய்த கலைஞர்

மேலும் இவர்கள் வரமாட்டார்கள் என்று ரசிகர்கள் மூலம் தெரிந்ததால் தான் கலைஞருக்கு நடத்திய நிகழ்ச்சியில் கூட மற்ற பொது மக்களும் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் இளம் ஹீரோக்களும் வரவில்லையாம். அந்த வகையில் அஜித் மற்றும் விஜய்யை அலட்சியப்படுத்தியதற்கான காரணம் தான் கலைஞர் 100வது நிகழ்ச்சி இந்தளவிற்கு மோசமாக மாறி இருக்கிறது.

இதை கொஞ்சம் கூட யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அத்துடன் இந்த ஒரு விஷயம் ரஜினி மற்றும் கமலுக்கு மிகப்பெரிய அவமானமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் பெரிய அளவில் கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் இவர்கள் கலந்து கொண்டு பேசியது அந்த இடத்தில் இவர்களுக்கு மிகப்பெரிய அவமானமாக இருந்திருக்கிறது. அதிலும் விஜய் அஜித்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் கொஞ்சம் கூட நமக்கு கொடுக்கவில்லை என்கிற ஒரு விஷயமும் அவர்களுக்கு தோன்றியிருக்கிறது.

Also read: நட்புக்குள் ஏற்பட்ட பிளவு.. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு டாட்டா போட்ட விஷால்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்