ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய மாமியார்.. என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய சந்தியா

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான ராஜா ராணி 2 சீரியலில் சாதாரண ஸ்வீட் கடை உரிமையாளரான சரவணனின் மனைவி சந்தியா தற்போது தென்காசியின் ஐபிஎஸ் ஆக மாறி உள்ளார். முதலில் மாமியார் சிவகாமி சந்தியாவின் ஐபிஎஸ் கனவிற்கு உறுதுணையாக இருந்தார்.

ஆனால் இப்போது சந்தியா ஐபிஎஸ் ஆன பிறகு, சரவணனனை சுத்தமாக மதிக்காமல் போய்விடுவாரோ என்ற பயத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்தியாசமாக டார்சல் செய்கிறார். அதையெல்லாம் சந்தியா சரவணனுக்காக பொறுத்துக் கொள்கிறார்.

Also Read: எந்த கேரக்டரா இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்.. சினிமாவை வெறுத்த பாரதி கண்ணம்மா நடிகை

இந்த சூழலில் குடும்பத்திற்கும் கடமைக்கும் இடையே சந்தியா மாட்டிக் கொண்டு முழிக்கிறார். அதாவது சந்தியா தென்காசியின் பிரபல ரவுடியை என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும் என்று உயர் அதிகாரியிடம் இருந்து ஆர்டர் வருகிறது. அந்த ரவுடி எங்கே இருக்கிறார் என்று சந்தியா வலை வீசி தேடிய நிலையில், அவரை காய்கறி சந்தையில் சந்தியா பார்க்கிறார். அங்கு அவரை கைது செய்ய வேண்டும் என சந்தியா முயற்சிக்கும் போது தப்பிக்க நினைத்ததால் வேறு வழி இல்லாமல் அங்கேயே அந்த ரவுடியை என்கவுண்டர் செய்து விடுகிறார்.

அவரின் அருகில் நின்று கொண்டிருந்த சந்தியாவின் மாமியார் சிவகாமியின் உடல் முழுவதும் அந்த ரவுடியின் ரத்த பட்டுவிடுகிறது. அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த பொது மக்களில் ஒருவர், ‘இந்த கொலையை செய்த போலீஸ் அதிகாரியின் குடும்பத்திற்கு தான் பாவ பழி எல்லாம் வந்து சேர போகிறது’ என்று மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்.

Also Read: 4 வருட நிகழ்ச்சியிலிருந்து விலகிய கரு.பழனியப்பன்.. காரணத்தைக் கேட்டு உறைந்து போன திரையுலகம்

இதைக் கேட்டதும் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற சிவகாமி, வீட்டிற்கு வந்ததும் பத்ரகாளியாக மாறுகிறார். அவர் அணிந்திருந்த புடவையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து ஆத்திரத்தை தீர்த்துக் கொள்கிறார். கடைசியில் வீட்டுக்கு வந்த சந்தியாவையும் கண்டபடி திட்டித் தீர்க்கிறார். கடைசியில் தன்னுடைய முகத்தில் இனி முழிக்கவே கூடாது என சந்தியாவை சிவகாமி கடும் கோபத்துடன் சொல்கிறார்.

இதன் பிறகு சரவணன் மற்றும் சந்தியா இருவரும் சிவகாமியை சமாதானபடுத்த முயற்சிக்கின்றனர். இப்படி கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் இயக்குனர் மூளையை அடகு வைத்து விட்டாரோ! என்று இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடுகளை பார்த்து நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்கின்றனர்.

Also Read: முதல் முறையாக சின்ன திரையில் என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்.. வெள்ளி விழா நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமை

ஏனென்றால் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் போலீஸ்காரர்கள் என்கவுண்டர் செய்வார்களா? இதனால் பொது மக்களின் உயிருக்கு பாதிப்பு வந்து விடாதா என்று கூட சீரியல் இயக்குனர் யோசிக்கவில்லை என, ராஜா ராணி 2 சீரியலை கிழித்து தொங்க விடுகின்றனர்.

- Advertisement -

Trending News