எப்பவுமே இந்த மாமா வேலைய மட்டும் விட மாட்றானுங்க.. விஜய் டிவியின் அடுத்த காதல் ஜோடி ரெடி

விஜய் டிவியில் பல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் டிஆர்பியில் டாப் லிஸ்டில் இருக்கும் ப்ரைம் டைம் சீரியல் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆயிரம் எபிசோடை கடந்ததற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே சேர்ந்து 1000-வது எபிசோடை சிறப்பாக கொண்டாடினர்.

அப்போது நிகழ்ந்த தரமான சம்பவத்தை பற்றி நெட்டிசன்கள் தற்போது விஜய் டிவியை பங்கம் செய்கின்றனர். பொதுவாக ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு ஜோடியை சேர்த்து வைத்து மாமா வேலையை சரியாக பார்ப்பது போல, இந்த முறை இந்த நிகழ்ச்சியின் மூலம் ஒரு ஜோடியை இணைத்து விஜய் டிவியின் அடுத்த ஜோடியை இணைத்து விட்டுள்ளனர்.

Also Read: பிக்பாஸ் நிகழ்ச்சியே பித்தலாட்டம் தான்.. வெளியேறிய நடிகையின் ஆவேச பேச்சு

அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000-வது எபிசோட்டின் கொண்டாட்ட விழாவை தொகுத்து வழங்கிய கேபிஒய் பிரபலம் பாலா வழக்கத்தைவிட கொஞ்சம் அழகாகவே வந்திருக்கிறார்.கோர்ட்டில் அவரை பார்த்த பிறகு அவருக்கு ஜோடியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கும் காவியா அறிவுமதி கோர்த்து விட்டுள்ளனர்.

காவியா அறிவுமதியும் இதற்கு வளைந்து கொடுத்தால் பாலா மற்றும் காவியா இருவரும் சேர்ந்து ஜோடியாக நடந்து சென்று கெத்துக் காட்டுகின்றனர். அப்போது வழக்கத்தைவிட பாலா வெட்கப்பட்டது ரசிகர்களை ரசிக்க வைத்தார்.

Also Read: 1000 எபிசோடை கடந்த விஜய் டிவி சீரியல்.. இறந்த நடிகைக்கு செய்த நெகிழ்ச்சியான சம்பவம்

ஏற்கனவே விஜய் டிவியின் மூலமாக ஆலியா-சஞ்சீவ் இருவரும் திருமணம் செய்து கொண்டது போல, தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் கதாநாயகன் அருண் பிரசாத் மற்றும் ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக முன்பு நடித்த VJ அர்ச்சனா இருவரும் காதலித்து நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், விரைவில் அவர்கள் திருமணம் செய்துகொள்கின்றனர்.

அந்த ஜோடியை தொடர்ந்து தற்போது பாலா-காவியா இருவரும் இணையப் போகிறார்கள் என விஜய் டிவி செய்யும் மாமா வேலை நெட்டிசன்கள் வெளிச்சம்போட்டு காண்பிக்கின்றனர்.

Also Read: கண்ணமாவை அடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் விவாகரத்து நடிகை.. வைரலாகும் புகைப்பட ஆதாரம்