என்னடா இது விஜய் டிவி பொழப்பு இப்படி நாறிவிட்டது.. நடிகைகளை தெருத்தெருவாக தேடும் நிலைமை

தற்போது அனைவரும் அதிகமாக பார்க்கக்கூடிய சேனலில் ஒன்றாக இருக்கிறது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பப்படும் சீரியல், காமெடி ஷோ, ரியாலிட்டி ஷோ மற்றும் திறமைகளை வெளிக்கொண்டு வரும் மேடையாக சூப்பர் சிங்கர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதன் மூலம் அனைவரும் இந்த சேனலை பார்க்கும் படியாக அதற்கேற்ற எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறார்கள்.

அதிலும் பிக் பாஸ், குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சிகள் எப்பொழுது ஒளிபரப்பப்படும் என்று ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளமானவர். முக்கியமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தால் எங்களுடைய கவலைகள் எல்லாம் மறக்கடிக்க செய்யும் விதமாக இருக்கிறது. அதற்காக அதிக வரவேற்பு மக்களிடம் இருந்து வருகிறது.

Also  read: நூலிலையில் தப்பிய சிவாங்கி, விஜய் டிவி செய்த மட்டமான வேலை.. எலிமினேட் ஆன போட்டியாளர்!

அடுத்ததாக எல்லாவித டீன் ஏஜ்யும் கவர் பண்ற விதமாக கனா காணும் காலங்கள் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். மேலும் தொடர்ந்து சீரியல்களையும் டெலிகாஸ் செய்து குடும்பங்களை கவரும் விதமாக சில தொடர்களை போட்டு வருகிறார்கள். இப்படி தொடர்ந்து நிகழ்ச்சியை அடுக்கிக் கொண்டே வருகிறார்கள்.

இதற்கு அடுத்ததாக தற்போது சீரியல்களில் நடிப்பதற்காக கதாநாயகி தேவைப்படுவதால் தெருத்தெருவாக தேடும் பணியில் இறங்கி விட்டார்கள். அதற்கு ஒரு புரோமோவையும் ரெடி பண்ணி மக்கள் மனதில் ஆழமாக பதியும் படியாக செய்து வருகிறார்கள்.

Also  read: காதலிக்காக எடுத்த புது அவதாரம்.. வேற லெவல் சர்ப்ரைஸ் கொடுத்த அமீர் – பாவனி

இப்படி தான் முன்னாடி கனா காணும் காலங்கள், ஆபீஸ் போன்ற நாடகங்களுக்கு ஆடிசன் வைத்து அதில் தேவைப்படும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து வந்தார்கள். பிறகு இப்பொழுது மறுபடியும் சீரியல் கதாநாயகி வேண்டும் என்று தெருத்தெருவாக கூவிக் கொண்டு வருகிறார்கள்.

தற்போது கோவையில் ஆடிஷன் நடைபெற இருப்பதால் அங்கு இருக்கும் மக்கள் அவருடைய திறமைகளை வைத்து வீடியோ எடுத்து அனுப்பி அதன் மூலம் ஆடிசனுக்கு வாருங்கள் என்று இவர்கள் போடும் ப்ரோமோவை பார்க்கும்பொழுது என்னடா விஜய் டிவி பொழப்பு இப்படி நாறிவிட்டது என்று சொல்லும் விதமாக பப்ளிசிட்டி பண்ணிட்டு வருகிறார்கள்.

Also  read: குக் வித் கோமாளி சீசன் 4 இந்த வாரம் வெளியேறும் நபர்.. அப்ப வின்னர் உறுதியாக இவங்க தான்