இந்த வார விஜய் டிவியின் டிஆர்பி லிஸ்ட்.. பாரதிகண்ணம்மாவை பின்னுக்கு தள்ளிய 2 சீரியல்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்பொழுதுமே டாப் ரேட்டிங்கில் இருக்கும். அதிலும் இந்த தொலைக்காட்சியின் டிஆர்பியை உயர்த்தும் சீரியல் என்று ஒரு சில சீரியல் உள்ளது. அந்த வகையில் இந்த வார முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களின் டிஆர்பி வரிசையை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இந்த வாரம் கயலின் முதல் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அத்துடன் கண்ணனும், ஐஸ்வர்யாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் சேர்ந்ததால் இத்தொடர் இன்னும் சுவாரசியமாக இருந்தது. இதனால் பாரதி கண்ணம்மா தொடரை பின்னுக்குத் தள்ளி பாண்டியன் ஸ்டோர்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளது.

பாக்கியலட்சுமி: பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியாவின் கடை திறப்பு விழாவுக்கு சினிமா பிரபலங்கள் ரஞ்சித், பிரியா ராமன் ஆகியோர் பங்கு பெற்று திறப்பு விழா விமர்சியாக நடைபெற்றது. அத்துடன் பாக்யாவுக்கு தொழிலுக்கு வந்த பிரச்சனையையும் சுமூகமாக பேசி சமாளித்துவிட்டார். இவ்வாறு கதைக்களத்துடன் அரங்கேறிய இந்த வார பாக்கியலட்சுமி தொடர் 2வது இடத்தை பிடித்துள்ளது.

பாரதி கண்ணம்மா: எப்போதும் டிஆர்பி முதலிடத்தை பிடித்து இருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் இந்த வாரம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காமெடி கலக்கல் ராணி அறந்தாங்கி நிஷாவை இத்தொடரில் இறக்கியும் முதலிடத்தை பிடிக்க முடியவில்லை என்பது வருத்தம்தான். ஆனாலும் இந்த வாரம் வெண்பா என்ட்ரியால் பாரதிகண்ணம்மா தொடர் மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

ராஜா ராணி 2: இந்த வார ராஜா ராணி 2 தொடரில் சமையல் போட்டியில் ஜெயித்த சரவணன் குடும்பத்துடன் பார்ட்டியில் கலந்து கொள்கிறார். சிவகாமி அம்மா குடித்துவிட்டு சந்தியாவை புகழ்ந்து தள்ளுகிறார். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் இத்தொடர் டிஆர்பி யில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழும் சரஸ்வதியும்: விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் தொடர் ஏழரை மணிக்கு ஒளிபரப்பாகிறது. ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் இத்தொடர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. தீபக், நக்ஷத்திரா நடிக்கும் இத்தொடரில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாக இருந்தால் டிஆர்பில் நல்ல இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்