ஒரே செலவில் 3 சீரியலை ஓட்டும் விஜய் டிவி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் உடன் இணையும் பாக்கியலட்சுமி

விஜய் டிவி சீரியல்கள் எப்போதுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் விஜய் டிவியில் 7.30 மணிக்கு தமிழில் சரஸ்வதியும், 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

தற்போது இந்த இரு தொடர்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் மகா சங்கமமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்றாக சேர்ந்து சென்னைக்கு வருகிறார்கள். அங்கு தமிழும் சரஸ்வதியும் தொடரில் தமிழை ஆபத்திலிருந்து காப்பாற்றி அவர்கள் வீட்டிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தங்குகிறார்கள்.

இவ்வாறு இரு சீரியல்களும் சேர்ந்து கதைக்களம் நகர்ந்தாலும் சன் டிவியை விட விஜய் டிவி டி ஆர் பில் பின்தங்கியது. இதற்காக விஜய் டிவி ஒரு பக்கா ப்ளான் போட்டு மூன்று சீரியல்களை ஒன்றாக இணைத்து ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதனால் விஜய் டிவி 7.30 முதல் 9 மணிவரை ஒளிபரப்பாகும் தொடர் தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களை ஒன்றாக சேர்த்து ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. தற்போது தமிழும் சரஸ்வதியும் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உடன் பாக்யா உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதனால் விஜய் டிவி டிஆர்பி ஏற்ற பல உத்திகளை கையாளுவது போல் குறைந்த செலவில் மூன்று தொடர்களையும் ஒன்றாக எடுக்க மாஸ்டர் பிளான் போட்டுள்ளது. இதனால் இனிவரும் எபிசோடுகள் பல சுவாரஸ்யங்கள் உடன் ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் இருக்கும்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை