நா கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிருந்தா இன்னைக்கு என் ரேஞ்சே வேற.. பாக்கியலட்சுமி நடிகை அதிரடி பேச்சு

Bhakyalakshmi Serial: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எப்ப எண்டு கார்டு போடுவாங்க என்ற அளவுக்கு இழுத்தடித்து வருகிறது. அந்த அளவுக்கு அரைத்து மாவையே அரைத்து புளிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த சீரியலில் ராதிகா என்னும் கேரக்டரில் நடிப்பவர்தான் நடிகை ரேஷ்மா. பல சீரியல்கள், படங்கள், பிக் பாஸ் நிகழ்ச்சி என கலக்கி இருக்கும் இவருக்கு இந்த கேரக்டர் ஒரு அடையாளமாகவும் இருக்கிறது.

அவர் தற்போது தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் நடிப்பு குறித்தும் ஒரு விஷயத்தை கூறியுள்ளார். அதன்படி வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை தலைவிரித்து ஆடுகிறது.

அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கூறிய ரேஷ்மா

அதைப் பற்றி கூறியுள்ள ரேஷ்மா நான் இதுவரை அதற்கு சம்மதித்தது கிடையாது. அப்படி இருந்தால் இன்றைக்கு என்னுடைய லெவல் வேற மாதிரி இருந்திருக்கும்.

இப்போது நான் ஒரு நாளைக்கு சில லட்சங்கள் சம்பளமாக வாங்குகிறேன். அதுவே போதும் என கூறிய அவர் ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததையும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இப்போது பிரேக் அப் ஆகிவிட்டது என்று கூறியிருக்கும் ரேஷ்மா அது யார் என்று சொல்லவில்லை. இப்படியாக அதிரடியான பல விஷயங்களை பற்றி மனம் திறந்து இருக்கிறார் பாக்கியலட்சுமி ராதிகா.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்