விஜய் டிவி தொலைக்காட்சியில் நாம் இருவர் நமக்கு இருவர் மற்றும் ராஜா ராணி, சின்னத்தம்பி, ஆயுத எழுத்து போன்ற பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
இந்த சீரியல்களை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு குடும்பப்பாங்கான பெயர்களை வைத்து சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே ஆதரவை பெற்று வரும் சீரியல்தான் காற்றின் மொழி. இந்த சீரியலில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் மற்றும் கண்மணி கதாபாத்திரத்தில் பிரியங்கா இருவரும் ஜோடியாக நடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக நடிகைகளின் சேட்டை சமூக வலைதளங்களில் அளவு கடந்து செல்கிறது என்று தான் கூற வேண்டும். ஏதாவது ஒரு ரசிகர் கேள்வி கேட்க அவர்களுக்கு பதில் அளிக்கிறேன் என்று கொஞ்சம் கூட நாகரிகம் இல்லாமல் சில நடிகைகள் செய்து வருகின்றனர்.
அந்த நடிகைகளின் பட்டியலில் தற்போது காற்றின் மொழி சீரியல் நடிகை பிரியங்கா இடம் பெற்றுள்ளார். அவரது சமூக வலைத்தளத்தில் பிரியங்கா ரசிகர்களுக்கு பதில் அளித்து வந்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் பீச்சில் எடுத்த புகைப்படம் இருக்கிறதா என கேள்வி கேட்டுள்ளார்.
அந்த ரசிகர் தான் விளையாட்டாக கேள்வி கேட்டார் என்றால் நடிகை கொஞ்சம் கூட யோசிக்காமல் எடுத்திருக்கிறேன் எனக்கூறிவிட்டு பீச்சில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யார் எது சொன்னாலும் செய்து விடுவாரா என சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகின்றனர்.