பிக் பாஸ் பாவனி ரெட்டிக்கு மறைமுகமாக ஆதரவு.. விஜய் டிவி போட்ட பக்கா பிளான்!

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் மட்டும் டாப் ரேட்டிங் பெறாமல் மக்கள் மனங்களிலும் முதலிடத்தை தட்டி சென்ற பெருமைக்குரியது. அந்த அளவிற்கு நேர்மறையான ஒரு கதை கருவையும், ஒரு பெண்ணின் துன்பங்களையும், அவள் அதை முறியடிப்பதையும் அழகாக பாவித்து விறுவிறுப்புடன் மெருகேற்றும் கதைக்களமாகவும் உள்ளது.

திடீரென மக்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பாரதிகண்ணம்மா சீரியல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இனி இந்தத் தொடருக்கு பதில் 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சின்னதம்பி என்னும் சீரியல் ஒளிபரப்பப்பட்ட உள்ளதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சின்னத்தம்பி சீரியலும் விஜய் டிவியின் ஒரு ஹிட்டான ரேட்டிங்கை கொடுத்து ஒளிபரப்பான சீரியல்தான். இதில் கதாநாயகனாக பிரஜின் பத்மநாபன் அவர்களும் கதாநாயகியாக தற்பொழுது பிக் பாஸ் சீசன்5ல் கலந்து கலக்கி வரும் பாவனி ரெட்டியும் நடித்துள்ளனர்.

இந்த சீரியல் நவம்பர்1 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்ப போவதாக செய்திகள் பரவுகின்றன. அந்த டைமிங்கில் ஏற்கனவே பாரதிகண்ணம்மா சீரியல் விறுவிறுவென வெற்றிகரமாக புதிய திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு ஹிட்டான சீரியல் திடீரென்று நிறுத்தப்பட என்ன காரணம் என பலரும் குழம்பி வருகின்றனர்.

சிலர் பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் கதை மாற்றத்தால் சீரியலை விட்டு விலகப் போகிறார் எனவும், மேலும் வில்லி வெண்பாவாக நடிக்கும் பரினா அவர்களும் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகுவதுமே காரணம் எனக் கூறுகின்றனர்.

chinnathambi-cinemapettai
chinnathambi-cinemapettai

இன்னும் சிலர், பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சி தற்பொழுது இரவு 10 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது அதில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடும் பாவனி அவர்கள், தொடர்ந்து சில நாட்களாக அவரது செய்கைகளால் மக்களுக்கு பிடிக்காமல் மக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதித்து வருவதால், விஜய் டிவி தந்திரமாக பாவனிக்கு மக்களிடம் இருந்து ஆதரவு திரட்ட, அவர் நடித்த ஹிட்டான சின்னத்தம்பி சீரியலை ஒளிபரப்பப் போகிறார்கள் எனவும் கூறுகின்றனர்.

இப்பொழுது பாரதிகண்ணம்மா சீரியல் முழுவதுமாக நிறுத்தப்படுமா? அல்லது இடைவெளியுடன் மீண்டும் தொடருமா? டெலிகாஸ்ட் டைமிங்கில் ஏதேனும் மாற்றம் இருக்குமா? என்ற கேள்விக்கு விடை தேடி மக்கள் அலை மோதுகின்றனர்.