வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

வீட்டை விட்டு வெளியேறிய எம்டன்.. சத்தியம் செய்து சமாதானப்படுத்தும் மகன்

Pandian Stores Serial 2 Today Episode: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் கடந்த ஒரு சில நாட்களாகவே கதிர்-ராஜி திருமணத்தை பற்றிதான் பரபரப்பாக காட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த சீரியலில் ‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்பது போல தான் தன்னுடைய மகன்கள் மூன்று பேரும் இருப்பார்கள் என பாண்டியன் தப்பு கணக்கு போட்டு விட்டார்.

இரண்டு பசங்களும் அடுத்தடுத்து ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டது அவருக்கு பெரிய வலியை கொடுத்துவிட்டது. இதை தாங்கிக் கொள்ள முடியாத பாண்டியன் இரவோடு இரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறார். பதறிப்போன கோமதி, ‘அவர் எங்கு போகிறார் என்று பாரு! ஏதாவது தவறான முடிவை எடுத்து விடப் போகிறார்’ என்று சரவணனிடம் சொல்கிறார்.

பின் தொடர்ந்து சென்ற சரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்குள் அவர் சென்று படுப்பதை பார்க்கிறார். ‘எனக்கு வீட்டுக்கே வர பிடிக்கல. இரண்டு பசங்களும் என் மூஞ்சியில் கரியை பூசி விட்டனர். இனி எப்படி இந்த ஊருக்குள் தலை காட்டப் போகிறேன் என்று தெரியவில்லை’ என பாண்டியன் தன்னுடைய மூத்த மகன் சரவணனிடம் அழுகிறார்.

Also Read: முத்துவை கேவலமாக மட்டம் தட்டி அசிங்கப்படுத்திய மச்சான்.. தம்பியின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மீனா

பாண்டியனை சமாதானப்படுத்தும் சரவணன் 

நீயும் உன்னுடைய தம்பிகள் போன்றே உனக்கு பிடித்த பொண்ணைப் பார்த்து திருமணம் செய்து கொள் என்றும் விரக்தியுடன் சொல்கிறார். உடனே சரவணன், ‘ஒருநாளும் அது போன்று நான் பண்ண மாட்டேன். நீங்க கை நீட்டுகிற பெண்ணின் கழுத்தில் தான் நான் தாலி கட்டுவேன்’ என்று அவர் தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.

சரவணன் பேச்சைக் கேட்டு ஓரளவு சமாதானமான பாண்டியன் அவருடன் சேர்ந்து வீட்டுக்கு போகிறார். ஆனால் போகப் போக கதிர் ராஜியின் வாழ்க்கையை காப்பாற்றுவதற்காக தான், அவரை திடீர் திருமணம் செய்து கொண்டார் என்பதை பாண்டியனும் புரிந்து கொள்வார். அதுவரை இந்த சீரியலை இதை வைத்தே தான் உருட்ட போகின்றனர்.

Also Read: நீங்கதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் அத்தை.. கோமதியின் முகத்திரையை கிழிக்கும் மருமகள்

- Advertisement -

Trending News