பிக்பாஸா வேண்டவே வேண்டாம்.. குக் வித் கோமாளிக்கு ஒகே சொன்ன விஜய் டிவி பிரபலம்!

ஒரு சமயத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் தான். இந்த தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். பெரும்பாலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை இந்த தொடரை விரும்பி பார்த்து வந்தனர். இப்போதுகூட இத்தொடரை மீண்டும் ஒளிபரப்பினால் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இத்தொடரில் முக்கியமானவர் நடிகர் இர்பான். வினித் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த இவர், மெர்க்குரி பூக்கள் என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார்.

பின்னர் எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. எனவே சரியான படவாய்ப்புகள் இல்லாமல், நல்ல கதைக்காக காத்திருக்கிறார்

இந்நிலையில், சமீபத்தில், இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளீர்களா என ரசிகர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த இர்பான், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் 3-வது சீசனில், பங்கேற்க உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், “கடந்த வருடம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க கிடைத்த வாய்ப்பை தவறவிட்டேன். இப்போது சமையல் தெரியும் என்பதால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளேன்” என கூறியுள்ளார்.

irfan
irfan

இதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் வரவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் நுழைகிறீர்ளா என்று கேட்டார். இதற்கு பதிலளித்த இர்பான், “சண்டை மற்றும் மோதல்களில் ஈடுபடுவதற்கு சரியான நபர் நான் அல்ல. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் எண்ணம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.