வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சர்வைவர் நிகழ்ச்சியை அடித்து நொறுக்க போகும் பிக் பாஸ் சீசன் 5.. இணையத்தில் லீக்கான 17 போட்டியாளர்களின் லிஸ்ட்

விஜய் டிவியில் நான்கு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியினை கடந்த 4 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

தற்பொழுதைய 5 வது சீசனையும் அவரே தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவரை பல்வேறு துறைகளில் இருக்கும் பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். ஒரு வீட்டில் பல கேமராக்களுக்கு மத்தியில், பல்வேறு விதமான மனிதர்களுடன், 100 நாட்கள் வாழ்ந்து மக்கள் மனதில் இடம் பிடிப்பவரே இந்த ஷோவின் வின்னர் ஆக அறிவிக்கப்படுவார்.

இதில் பங்கேற்கும் பிரபலங்களின் மனநிலை, பிரச்சினைகளை அவர்கள் சமாளிக்கும் விதம் போன்று அனைத்தும் மக்களுக்கு காட்டப்படுகிறது. இன்னும் சில தினங்களில் தொடங்கப்பட உள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ மக்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பட்டியல் அவ்வப்போது ஒரு யூகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் தொகுப்பாளினி பிரியங்கா, நாம் இருவர் நமக்கு இருவர் புகழ் ராஜு, நிழல்கள் ரவி, நடிகை பவானி ரெட்டி, பாடகி சின்னப்பொண்ணு, இமான் அண்ணாச்சி, ஷகிலா மகள் மிலா, மாடல் நடியா, நடிகை சூசன், அபிஷேக், கோபிநாத் ரவி, சிபி சந்திரன், நடிகர் வருண், நிருப் நந்தா, நமிதா மாரிமுத்து, பாடகி இசைவாணி, நடிகை பிரியா ராமன் உள்ளிட்டோர் பெயர்கள் இணையதளத்தில் வெளி வந்துள்ளது.

இந்த தகவல்கள் 90% உண்மையானது என்றே ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பெயர்களை கண்ட ரசிகர்கள் நிகழ்ச்சியை காண மிகவும் ஆவலாக உள்ளனர். ஏற்கனவே சர்வைவல் நிகழ்ச்சி ஜீ தமிழில் போய்க் கொண்டிருப்பதால், பிக்பாஸ் வெளிவரும் இந்த சூழ்நிலையில் டிஆர்பி ரேட்டிங் விஜய் டிவிக்கு எகிறும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

biggboss-5-cinemapettai
biggboss-5-cinemapettai
- Advertisement -

Trending News