விஜய் டிவியை பொருத்தவரை சீரியல்களும் சரி, ரியாலிட்டி ஷோக்களும் சரி மக்களை கவரும் வகையில் அமைந்து வருகின்றன. தாய்மார்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதை தெளிவாக தெரிந்து வைத்து ஒவ்வொரு காயையும் நகர்த்தி வருகிறது.
இதன் காரணமாக தற்போது விஜய் டிவி சன் டிவியின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்த்து விட்டது என்பது வெளியில் வராத தகவல். இன்னும் சில நாட்களில் சன் டிவியை விஜய் டிவி ஓரம் கட்டி விடும் என்பதுதான் உண்மை.
விஜய் டிவியில் பகலில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் தாய்மார்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் இடம்பெற்ற சீரியல் ஈரமான ரோஜாவே.
ஈரமான ரோஜாவே சீரியலில் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்து வந்த வெங்கடேசன் என்பவர் சமீபத்தில் உயிரிழந்தார். இதன் காரணமாக தற்போது அவரது நாட்டரசன் என்று கதாபாத்திரத்திற்கு வேறு ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
வெங்கடேசன் ஏற்கனவே விஜய் டிவி பிரபலமான சீரியல்களான சரவணன் மீனாட்சி, பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்து வந்தார். வில்லத்தனம் கலந்த இவரது நடிப்பிற்கு ஈடு இணையே இல்லை.
அப்பேர்ப்பட்ட கதாபாத்திரத்தை புதிதாக வந்த நடிகர் எப்படி நிரப்ப போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு சில கதாபாத்திரங்களின் இழப்பு அந்த சீரியலை மொத்தமாக சூறையாடி விடும். அந்த வகையில் ஈரமானரோஜா என்ன கதியாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.