வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் தேடும் விஜய் டிவி.. பிரதீப்புக்கு கிடைத்த மறு வாய்ப்பு

Pradeep-Vijay Tv: கடந்த ஒரு வாரமாகவே சோசியல் மீடியாவில் விஜய் டிவியை பிக்பாஸ் ரசிகர்கள் கிழி கிழி என்று கிழித்து விட்டனர். இதற்கு முக்கிய காரணம் பிரதீப்புக்கு கொடுக்கப்பட்ட ரெட் கார்டு தான். எந்த விளக்கமும் கேட்காமல் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை சொல்லி சேனல் தரப்பு அவரை அவமானப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றியது.

அது பெரும் பிரளயமாக வெடித்த நிலையில் பிரதிப்புக்கு நியாயம் கேட்டு ரசிகர்கள் உரிமை குரல் தூக்கினார்கள். அது மட்டுமின்றி இதனால் கமலும் பல விமர்சனங்களுக்கு ஆளானார். அதனாலேயே கடந்த சனிக்கிழமை எபிசோடை ஒட்டு மொத்த மீடியாவும் ஆவலுடன் எதிர்பார்த்தது.

ஆனால் வழக்கம் போல சப்பை கட்டு கட்டி இந்த பிரச்சினையை முடித்தார் ஆண்டவர். இதனால் பிரதீப்பின் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க மீண்டும் வீட்டுக்குள் வந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த பிரதீப்பும் இப்போது அமைதியாக தன் வேலையை பார்க்க தொடங்கி விட்டார்.

Also read: மாயாவின் கூட்டணியை அசைத்துப் பார்க்கும் நாமினேஷன்.. டேஞ்சர் சோனில் இருக்கும் 2 பேர்

இப்படியாக இந்த பிரச்சனை ஆசுவாசமடைந்துள்ளது. இந்த நிலையில் விஜய் டிவி செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளார்கள். அதாவது பிரதீப்புக்கு அவர்கள் ஒரு வெப் தொடரை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார்களாம்.

இது பற்றிய பேச்சுவார்த்தை தற்போது முடிந்துள்ள நிலையில் பிரதீப்பும் அதை ஏற்றுக் கொண்டு கதையை தயார் செய்யும் வேலையில் இறங்கியுள்ளார். அந்த வகையில் விஜய் டிவி மீது கோபத்தில் இருந்த அவரின் ரசிகர்கள் இந்த விஷயத்தால் தற்போது சாந்தமடைந்துள்ளனர்.

மேலும் ஒரு இயக்குனராக வெற்றி பெற வேண்டும் என்பது பிரதீப்பின் பல வருட கனவு. அதை நினைவாக்க விஜய் டிவி முன்வந்திருப்பது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஆக மொத்தம் விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் பிரதீப்பின் வெப் தொடரை நாம் கண்டு களிக்கலாம். இதை தான் ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்பார்கள்.

Also read: மாயாவுக்கு கட்டம் கட்டிய பூர்ணிமா.. இனிமேதான் ஆட்டமே ஆரம்பம்

- Advertisement -

Trending News