வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

டிஆர்பி-காக உயிருடன் விளையாடும் விஜய் டிவி.. மரண பயத்தில் பிக்பாஸ் ஜோடிகள்

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸில் கலந்து கொண்ட ஜோடிகளை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக அரங்கேற்றினர். இதற்கு நடுவராக நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்று நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக நடத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது ஒரு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது, அடுத்தடுத்து இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு கொரோனா நெகடிவ் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. முதன் முதலில் கேப்ரில்லா எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதன் பின் ஆஜித் அதாவது பிபிசியில் கேப்ரில்லாவுக்கு ஜோடியாக ஆட்டம் போட்ட ஆஜித்துக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இன்று சென்றாயன் தனக்கு கொரோனா பாசிட்டிவ் இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இப்படி அடுத்தடுத்த பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் பெரும் பயத்தில் உள்ளனர். இதனால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக கொரோனா டெஸ்ட் எடுத்தார்களா என்ற சந்தேகத்தின் பெயரில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இப்படி மக்கள் வெளியில் போராடிக் கொண்டு வரும் சூழ்நிலையில், விஜய் டிவி டிஆர்பியை ஏற்றுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமா என்பது போன்ற சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இன்னும் யார் யார் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும், தற்போதைய சூழ்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கை.

- Advertisement -

Trending News