விஜய் டிவியை ஒதுக்கிவிட்டு ஜீ தமிழுக்கு சென்ற பிரபல நடிகர்.. நல்ல டிஆர்பி இருந்தும் தவறான முடிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரியன். தற்போது இந்த சீரியலில் இருந்து விலகி அவருக்கு பதில் விகாஸ் சம்பத் நடித்துக்கொண்டிருக்கிறார். எனவே ஆரியம் பாக்கியலட்சுமிக்கு பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் சீசன்2 சீரியலில் நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியானது.

அதைத்தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் துவங்கவுள்ள புத்தம்புது சீரியலில் செழியன் கதாநாயகனாக கமிட்டாகியுள்ளார். இந்த தொடரில் சீனியர் ஆர்டிஸ்ட் அர்ச்சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார். நடிகை அர்ச்சனா எண்பதுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 படங்களில் ஏகப்பட்ட படங்களில் நடித்து இரண்டு முறை தேசிய விருது பெற்றவர்.

அத்துடன் சமீபகாலமாக அர்ச்சனா தெலுங்கு தொலைக்காட்சிகளில் ஒரு சில நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். அதைத்தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் சீரியலை நடிப்பதன் மூலம் தமிழ் ரசிகர்கள், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அர்ச்சனாவை பார்க்க போகின்றனர். மேலும் செம்பருத்தி சீரியலில் தயாரிக்கும் ப்ரொடக்ஷன் தான் ஆரியன் புதிதாக நடிக்கும் சீரியலிலும் ப்ரொடக்ஷன் செய்யப்போகிறது.

இந்த சீரியலுக்கு இன்னும் டைட்டில் வைக்காத நிலையில், ஆரியனுக்கு ஜோடியாக காதல் மனைவி ஷபானா வருவாரா என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். ஏனென்றால் இந்த காதல் ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது.

ஆனால் ஷபானா செம்பருத்தி சீரியலில் நடித்துக் கொண்டிருப்பதால் அந்த சீரியல் தற்சமயம் நிறைவு பெறாது என அந்த சீரியலின் இயக்குநர் தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டதால், ஷபானா ஆரியனுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பில்லை. ஆனால் சீரியல் நடிகை சரண்யா, ஜீ தமிழில் ஒரு புத்தம் புது சீரியலில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஒருவேளை ஆரியனுக்கு ஜோடியாக சரண்யா இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

சரண்யா சமீபத்தில் விஜய் டிவியில் துவங்கப்பட்ட ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று அந்த சீரியலின் கதாநாயகன் பிரஜனுக்கு பட வாய்ப்பு கிடைக்க அந்த சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சரண்யா தற்போது வேறு ஒரு சீரியலில் நடிக்க துவங்கிவிட்டார். எனவே ஆரியம் உடன் ஜோடி சேர்ப்பது சரண்யாவா அல்லது ஷபானாவா என பொறுத்திருந்து பார்ப்போம்.