திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

குக் வித் கோமாளி புகழின் கைராசியால் திறக்கப்பட்ட புதிய கடை.. அரை மணி நேரத்தில் ஆப்பு வச்ச அதிகாரிகள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் புகழ். என்னதான் ஆரம்பத்திலேயே புகழ் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவருக்கு பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.

மேலும் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்கு சென்று சாதித்தவர்கள் வரிசையில் தற்போது விஜய் டிவியால் அடுத்த கட்டத்திற்கு புகழ் சென்றிருக்கிறார். ஏனென்றால்  தற்போது புகழ் அஜித்தின் வலிமை, விஜய்யின் தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான், இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 46வது படம் என பல படங்களில் காமெடியன் வேடத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார் புகழ்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் புகழால் செல்போன் கடை திறக்கப்பட்ட அன்றே கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது நடிகர் புகழுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இதனால் அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் அலை மோதி வருகிறது.

அதேபோல் நடிகர் புகழ் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் கடை திறப்பு விழா போன்ற சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் புகழ்  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டையில் செல்போன் கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு விருந்தினராக சென்றிருக்கிறார்.

அப்போது புகழ் வந்திருக்கும் தகவல் அறிந்த பலர் அங்கு திரண்டனராம்.  அதுமட்டுமில்லாமல் புகழுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் ஆர்வத்தில் முட்டி மோதி கொண்டனராம். இந்த தகவலை அறிந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்த தாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை  மிகவும் வேகமாக அதிகரித்து வருவதால் தமிழக அரசு சார்பில் புதிய கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதை சுட்டிக்காட்டி மாநகராட்சி அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்ததோடு கடையின் உரிமையாளர் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.

எனவே, புதிய கிளையின் திறப்பு விழா அன்றே கடைக்கு சீல் வைக்கப்பட்டது கடை உரிமையாளர்களை மட்டும் இல்லாமல் அப்பகுதி மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News