நீங்க நடிச்ச வரைக்கும் போதும் என விரட்டிய விஜய் டிவி.. அரவணைத்த சன் டிவி!

2008ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஆட்டம் பாட்டம் என்ற நடனப் போட்டியில் போட்டியிட்டார். ராஜா ராணி என்ற தொடர் மூலமாக நமக்கு அறிமுகமானவர் சஞ்சீவ்.

அதை தொடர்ந்து மலையாள திரையுலகில் தடம் பதித்தார். தமிழ் சினிமா திரையில் குளிர் 100 டிகிரி, காதல் தோழி ,நீயும் நானும், ஆங்கிலப்படம் போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக வலம் வந்தவர் சஞ்சீவ்.

திரைப்படங்களை தொடர்ந்து சின்னத்திரையில் அடி வைத்தார் ராஜா ராணி என்ற தொடரில் கார்த்திக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தார் .வெள்ளித்திரையில் கிடைக்காத வெற்றியும் புகழும் சின்னத்திரையில் அவர் கொண்டாடி மகிழ்ந்தார்.

ராஜா ராணி வெற்றியைத் தொடர்ந்து காற்றின் மொழி என்ற தொடரில் கதாநாயகனாக அவரது கலைப் பயணம் தொடர்ந்தது. அதையடுத்து ராஜா ராணியில் கதாநாயகியாக நடித்த ஆலியா மானசா காதலித்து கரம் பிடித்தார் சஞ்சீவ்.

இப்போது அவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தையும் உள்ளது. சமீபத்தில் ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சி தொடர்கள் திரைப்படங்கள் டைட்டில்கள் வைத்து அமையப் பெற்றன சின்னதம்பி, ராஜா ராணி, நாம் இருவர் நமக்கு இருவர், மௌனராகம், வேலைக்காரன், காற்றின் மொழி போன்றவை ஆகும்.

காற்றின் மொழி தொடர் 331 எபிசோடுகள் ஓடிய நிலையில் நிறுத்தப்பட்டது. அதை எடுத்து கொஞ்சம் பிரேக் இப்போது சன் டிவியில் தனது புதிய சீரியலை தொடங்க இருக்கிறார். விஷன் டைம்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் “கயல்” என்ற தொடராகும். இதுவும் சினிமா டைட்டிலை கொண்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

sanjeev-alya-cinemapettai
sanjeev-alya-cinemapettai
- Advertisement -