ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பிரியா பவானி, வாணி போஜன் வரிசையில் மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்.. முதல் படத்திலேயே கதாநாயகியாக அடித்த ஜாக்பாட்

சின்னத்திரையில் பிரபலமான நடிப்பவர்கள் சின்னத்திரை ஷோக்களில் பங்கேற்பவர்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவது உண்மை, என்பதற்கு சான்றாக பல சின்னத்திரை பிரபலங்கள் வெள்ளித்திரையில் தங்களுடைய வெற்றிக்கொடியை நிலை நாட்டியுள்ளார்.

சந்தானம், முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் போன்ற பலர் சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் நிலையில் இவர்களை தொடர்ந்து நம் மகாலட்சுமி அதாங்க நம்ம ரட்சிதா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர் ரசித்தா அறிமுக தொடரிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர்.

அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீசன் 2வில் கவின் ஜோடியாக காதல் காட்சிகளில் அசத்தலாக நடித்து இருப்பார். அப்போது ‘பாவாடை தாவணிக்கு’ என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. தற்போது அவருடைய அழகான புடவைகளை ரசிக்கும் ரசிகைகள் ஏராளம்.

குடும்ப பாங்கான முறையில் அவருடைய நேர்த்தியான உடைகள், அலங்காரங்கள் நம் கண்களுக்கு விருந்தாகும். சரவணன் மீனாட்சி தொடர்ந்து இப்போது “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரில் செந்திலுடன் நடித்து வருகிறார். இந்த தொடருக்கு பெரும்பாலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

Rachitha Mahalakshmi
Rachitha Mahalakshmi

இந்நிலையில் ரசித்தாவிற்கு திரைப்பட வாய்ப்பு வந்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக செய்திகள் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Trending News