விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல்களில் நடிகராக அறியப்பட்டவர் அசீம். இவருக்கும் அதே சீரியலில் நடித்த 19 வயது நடிகை ஒருவருக்கும் இருந்த ரகசிய உறவால் மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பெரிய அளவு ரசிகர் பட்டாளம் இல்லை என்றாலும் கவனிக்கப்படும் சீரியல் நடிகராக வலம் வந்தவர் தான் அசீம். இவரது நடிப்பில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பானது.
இந்நிலையில் அசீம் நடித்த சீரியலில் கூட நடித்த 19 வயது இளம் நடிகை ஒருவருடன் ரகசிய உறவு ஏற்பட்டதாக அப்போதே பல பத்திரிகைகளில் செய்திகள் வெளியானது. அந்த நடிகைகூட சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வீட்டில் கலந்துகொண்டு காதல் சர்ச்சையில் சிக்கினார்.
வயதுக்கும் உருவத்திற்கும் சம்பந்தம் இல்லாத அந்த இளம் நடிகையுடன் அசீம் உறவிலிருந்து வந்ததை நண்பர்கள் வாயிலாக அறிந்த அவரது மனைவி அசீமுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இருவருக்கும் சண்டை முற்றியதாக தெரிகிறது.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்று விட்டு பிரிந்து விட்டதாக அசீம் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் காரணமாக தான் கலந்து கொள்ள முடியவில்லை என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். ஆனால் உண்மைக் காரணம் அதே வீட்டில் அவரது சர்ச்சை காதலி இருந்ததால்தான் கலந்துகொள்ள யோசித்தார் எனவும் பிக்பாஸ் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளன.