கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக திகழ்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது சின்னத்திரை நடிகர்கள் பலரின் கனவாக இருக்கிறது.
தற்போது போனி கபூரின் தயாரிப்பில், ஹச் வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு தல ரசிகர்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான நடிகர் புகழ் ‘வலிமை’ படத்தில், தல அஜித்துடன் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் கசிந்து வருகின்றன.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்திலுள்ள பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் புகழ்.
தற்போது புகழ் தல அஜித்தின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்திருப்பதாக, மறைமுகமாக தன்னுடைய நண்பர்களுடன் பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.
எனவே, இந்த செய்தியை கேட்ட பலர், புகழுக்கு தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் சமூகவலைத்தளங்களின் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.
புகழ் பேசியிருக்கும் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.