என்னை கோமாளியாகவே நடத்துகிறார்கள்.. பட வாய்ப்புகள் கிடைத்தும் கண்ணீர் விடும் விஜய் டிவி பிரபலம்

உண்மையான திறமைசாலிகளை அடையாளம் காட்டுவதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே இல்லை. அந்த வகையில் விஜய் டிவியிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த சாதித்த பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அதில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். தற்போது அந்த வகையில் குக் வித் கோமாளி புகழும் இடம் பெற்றுள்ளார்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சிகளை விட அதிகமான ரசிகர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு உள்ளனர். சமையல் நிகழ்ச்சியில் காமெடி நட்சத்திரங்களை போட்டு பயங்கர என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர். அதில் புகழ் என்பவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது சினிமாவிலும் கால்பதிக்க தொடங்கியுள்ளார் புகழ். அந்த வகையில் முதல் படமே தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 பட வாய்ப்பையும் பெற்றுள்ளார்.

இருப்பினும் புகழின் நிஜ வாழ்க்கையிலும் அவரை சிலர் கோமாளியாகவே நினைக்கிறார்கள். அப்படி ஒருவர் புகழை ‘கோமாளி’ என்று நினைத்து ஏமாற்றி உள்ளார். அதாவது அந்த நபர், புகழின் தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, ‘டைரக்டர் சங்கர் அவர்களின் ஆபீஸிலிருந்து பேசுகிறோம் என்று கூறியுள்ளனர்.

pugazh-cinemapettai

அதைத்தொடர்ந்து சென்னையில், கிண்டி அருகில் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார்’. இதைக்கேட்ட புகழுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறது, ஆனந்தத்தில் துள்ளி குதித்துள்ளார். அதன்பின் தொலைபேசியில் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார் புகழ்.

அங்குதான் அவருக்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. ஆம், அந்த நபர் கூறிய இடத்திற்கு சென்று விட்டு, அந்த தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டால், அந்த எண் ஆனது ‘சுவிட்ச் ஆஃப்’ என்று வந்துள்ளது. இந்த ஏமாற்றத்தினால் புகழ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். சமீபத்தில் ஒரு பேட்டியில், கண்கலங்கி இந்த சம்பவத்தை புகழ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -