இரண்டு வேளை சாப்பாட்டுக்கே வழியில்லையாம்.. இறந்த பின் கைவிடப்பட்ட விஜய்டிவி பிரபலத்தின் குடும்பம்

விஜய் டிவி வந்த தொடக்கத்தில் புதுவிதமான நிகழ்ச்சிகளின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அப்போது டாப் சேனலாக இருந்த சன் டிவியையே ஓரம் கட்டியது. அதுமட்டுமல்லாமல் விஜய் டிவியிலிருந்து பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு சென்று புகழின் உச்சத்தை அடைந்து உள்ளனர்.

இந்நிலையில் விஜய் டிவி பிரபலம் ஒருவர் இறந்த பின்பு அவரது குடும்பம் மிகுந்த வறுமையில் வாடி வருகிறது. ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாத அளவிற்கு வறுமையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. பெரும்பாலும் இவர் வடிவேலு கெட்டப்புகள் போட்டு அசத்த கூடியவர். வடிவேலு வாய்ஸ், பாடி லாங்குவேஜ் அப்படியே செய்யக்கூடியவர் தான் வடிவேல் பாலாஜி. இதனால் அவருக்கு அடைமொழியாக அவரது பெயருக்கு முன்னால் வடிவேலு என்பதை இணைத்துக்கொண்டார்.

அதன்பின் வடிவேல் பாலாஜியை மிகவும் பிரபலமாக்கியது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சி தான். இதில் சிரிச்சா போச்சு என்ற ரவுண்டில் போட்டியாளர்களை சிரிக்க வைக்க வேண்டும். அவ்வாறு வடிவேல் பாலாஜி வந்து நின்றாலே எதிரில் உள்ளவர்கள் சிரித்து விடுவார்கள்.

இவ்வாறு தன் வாழ்க்கையில் முன்னேற்றத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் 2020இல் இறந்ததாகச் செய்தி வெளியானது. அப்போது வடிவேலு பாலாஜியின் குடும்பம் மருத்துவ செலவிற்காக மிகுந்த சிரமப்பட்டு உள்ளது. சின்னத்திரையில் பிரபலமான ஒரு நடிகருக்கு மருத்துவ செலவுக்கு கூட வசதியில்லாதது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அப்போது திரைப்பிரபலங்கள் மற்றும் அவரது நண்பர்கள் வடிவேலு பாலாஜியின் குடும்பத்திற்கு உதவுவதாகும், அவரது குழந்தைகளுக்கு படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறிவந்தனர். ஆனால் சமீபத்தில் வடிவேலு பாலாஜி குடும்பத்திடம் பேட்டி எடுக்க ஒரு யூடியூப் சேனல் சென்றுள்ளது. அவர்களிடம் பாலாஜியின் மனைவியை நாங்கள் நலமாக இருக்கிறோம் என கூறி உள்ளார்.

ஆனால் அந்த யூடியூப் சேனல் பாலாஜி குடும்பத்தின் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரிக்கும்போது அந்தக் குடும்பம் இரண்டு வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவதாக கூறியுள்ளனர். ஆனால் இந்த நிலைமையிலும் பாலாஜியின் மனைவி இந்த விஷயங்களை வெளியில் சொல்லாமல் உள்ளார். எல்லோரையும் சிரிக்க வைத்த ஒரு கலைஞனின் குடும்பம் தற்போது வறுமையில் வாடுகிறது. மேலும் விஜய் டிவி கூட இவர்களுக்கு உதவாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

Next Story

- Advertisement -