சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என இப்போது டாப் இடத்தில் குடியிருக்கிறது விஜய் டிவி. என்னதான் எத்தனை ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் மக்களிடம் பிக்பாஸ்-க்கு நிகரான வரவேற்பு வேறு நிகழ்ச்சிகளுக்கு இருப்பதில்லை.
வாரத்தின் சில மணி நேரங்களில் டி.ஆர்.பி -ஐ எகிர விட்டதற்கு மூலகாரணம் இந்த பிக்பாஸ் தான். நான்காவது சீசனும் முடித்தாயிற்று ஏற்கனவே இருந்த வரவேற்பை அதிகப்படுத்த விஜய் டிவி கடந்த முறை விஜய் டிவி பிரபலங்களையே அதிகம் களமிறக்கியது.
ரம்யா பாண்டியன் உட்பட எல்லோரும் இப்போது விஜய் டிவியின் பிராண்டாகிப்போனார்கள். இப்படியாக இருக்க சீசன் 5 பற்றிய சில செய்திகள் கசிந்த வண்ணமே உள்ளன.
கடந்த சீசன் போலவே இந்த முறையும் விஜய் டிவி பிரபலங்களையே களமிறக்க முடிவு செய்துள்ளதாகவும். அதில் ஒரு போட்டியாளர் சீரியல் நடிகர் “ஈஸ்வர்” என்றும் செய்திகள் வரவே அந்த சீரியல் நடிகரை பற்றி பல்வேறு கோணங்களில் தேடினோம்.
அந்த சீரியல் நடிகர் ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெய்ஸ்ரீ தன் கணவர் அவரோடு நடிக்கும் மகாலெட்சுமியோடு கள்ள உறவில் இருப்பதாக ஒரு புகார் கூறியிருந்தார்.
அதற்கு மாறாக தன் மனைவி ஜெய்ஸ்ரீ மகாலெட்சுமியின் கணவருடன் கள்ள உறவு வைத்திருப்பதாக கறினார் ஈஸ்வர். இப்படியான ஒரு பிரச்சினையில் இருக்கும் நடிகரை பிபி-5 ல் களமிறக்குவதற்கு டி.ஆர்.பி தான் காரணமாக இருக்கும்.
விஜய் டிவி வாசகர்கள் பலரும் “ஷிவாங்கி”-யின் பேச்சிலும் குறும்பிலும் மயங்கிவிட பிபி-5ல் ஷிவாங்கியை கொண்டு வர கோரிக்கை வைத்துள்ளனராம். குக் வித் கோமாளிக்கு பிறகு புகழ் அஸ்வின் ஷிவாங்கி என எல்லோரும் சினிமாவில் பிசியாக இருக்கிறார்களாம்.
வாய்ப்பு கிடைக்காத கோமாளிகளை கொண்டு வர வாய்ப்பிருப்பதாக ஒரு பேச்சு.