செம்பருத்தி சீரியல் நடிகையை வளைத்துப் போட்ட பாக்கியலட்சுமி நடிகர்.. அடுத்த சின்னத்திரை ஜோடி

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஷபானா. இவரும், விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆரியனும் காதலிப்பதாக பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

அதை உண்மையாக்கும் வகையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட அவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாக கூறவில்லை.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்கள் கையில் மோதிரம் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை நடிகர் ஆர்யன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கருதினார்.

ஆனால் இதுபற்றிய எந்த அறிவிப்பையும் இந்த ஜோடி இதுவரை வெளியிடவில்லை. அவ்வப்போது தாங்கள் இணைந்து எடுத்த புகைப்படத்தை மட்டும் இருவரும் தங்கள் வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

பொதுவாக ஒரே சீரியலில் இணைந்து நடிக்கும் இருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். சஞ்சீவ் – ஆல்யா, செந்தில் –  ஸ்ரீஜா போன்ற ஜோடிகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இரண்டு வெவ்வேறு சானல்களில் உள்ள இருவர் காதலிப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும், தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்