வந்திய தேவனுக்கு ஜோடியாகும் விஜய் டிவி பைங்கிளி.. கொஞ்ச நெஞ்ச டிஆர்பியும் போச்சு

Karthi : கார்த்திக்கு நடுவில் தொடர்ந்து சறுக்கல் வந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் அவருக்கு ஒரு மாபெரும் வெற்றியை கொடுத்தது. வந்தியத்தேவனாக வலம் வந்த கார்த்திக்கு எக்கச்சக்க பெண் ரசிகர்கள் கிடைத்தனர். அதன் பிறகு கடைசியாக அவரது நடிப்பில் ஜப்பான் படம் வெளியானது.

இந்த படம் பெரிய அளவில் போகாத நிலையில் தன்னுடைய அடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக விஜய் டிவி பைங்கிளி நடிக்கிறார்.

இப்போது சன் டிவி தொடர்கள் சூடு பிடித்த காரணத்தினால் விஜய் டிவி டிஆர்பி குறைய தொடங்கியது. ஆனாலும் அதை தக்க வைத்துக் கொள்ள சில சீரியல்கள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் கதாநாயகி சுவாதிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது அவருக்கு வெள்ளித்திரையில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Also Read : தயாரிப்பாளர்களை முக்காடு போட வைத்த கார்த்தியின் 5 படங்கள்.. தலையில் அடித்து புலம்ப வைத்த படம்

இப்போது இதற்கான படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் மெய் அழகன் என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுவும் வெள்ளித்திரையில் முதல் படத்திலேயே சுவாதிக்கு கார்த்தி போன்ற பெரிய ஹீரோ உடன் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம்தான். மேலும் இப்போது படத்தில் நடிப்பதால் சீரியலில் அவரது கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து சுவாதி விலக வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இதனால் விஜய் டிவியின் கொஞ்சம் டிஆர்பியும் இப்போது போகும் தருவாயில் இருக்கிறது. மேலும் சுவாதி ரசிகர்கள் அவரை விரைவில் வெள்ளித்திரைகள் பார்க்க ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : எதிர்நீச்சல் சீரியலுக்கு வந்த சோதனை.. கிடப்பில் போடப்பட்ட 7 விஷயங்கள்