செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜய் டிவி வேலைக்கு ஆகாது.. சன் டிவி பக்கம் தாவிய பிரபல நடிகையின் கணவர்

விஜய் டிவியில் சீரியல் ஹீரோவாக அறிமுகமாகி தொடர்ந்து இரண்டு சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் தற்போது சன் டிவியில் உருவாகும் புதிய சீரியலில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள செய்தி விஜய் டிவியினருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

விஜய் டிவியில் வாய்ப்பு கிடைக்காதா என பலரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். காரணம் விஜய் டிவிக்கு சென்றுவிட்டாலே ஈசியாக பட வாய்ப்புகள் கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் சீரியலிலும் மிகப்பெரிய சம்பளங்கள் கிடைக்கும் என்பதுதான்.

அந்த வகையில் ராஜா ராணி சீரியல் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சஞ்சீவ். இவர் குளிர் 100 டிகிரி, ஆங்கில படம் போன்ற சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் சினிமா பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.

sanjeev-alya-cinemapettai
sanjeev-alya-cinemapettai

இந்த நேரத்தில்தான் ராஜா ராணி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியல் மிகப்பெரிய வெற்றியைப் பெற அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஆலியா மானசா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சஞ்சீவ்.

அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான காற்றின் மொழி என்ற சீரியலிலும் ஹீரோவாக நடித்து வந்தார். ஆனால் அந்த சீரியல் சுமாரான வரவேற்பை பெற்றதால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மீண்டும் சஞ்சீவ் எந்த சீரியல் நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் திடீரென சன் டிவி மிகப் பெரிய சம்பளம் கொடுத்து சஞ்சீவ் கார்த்திகை ஒப்பந்தம் செய்து விட்டதாம். அதை அவரே அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் சன் டிவியில் மாலை 7.30 மணிக்கு அந்த சீரியல் ஒளிபரப்பப்பட உள்ளது.

- Advertisement -

Trending News