சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு படையெடுக்கும் நடிகர்களில் விஜய் டிவியில் இருந்து வரும் பிரபலங்கள் அதிகமாக இருக்கின்றனர். அப்போதிலிருந்து இப்போதுவரை விஜய் டிவியில் பிரபலமான பலரும் சினிமாவில் தொடர்ந்து தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மா கா பா ஆனந்த், புகழ், சிவாங்கி போன்ற பலரையும் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி நிறைய பேருக்கு சினிமா வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
அதில் அடுத்த சிவகார்த்திகேயன் என அனைவராலும் கொண்டாடப்பட்ட அஸ்வின் குமார் என்பவரும் தற்போது கைவசம் மூன்று படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இன்றைய தேதியில் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருப்பதும் இவர் தான் என்கிறார்கள் விஜய் டிவி வட்டாரங்கள்.
இதனாலேயே என்னமோ கொஞ்ச நாட்களாகவே தலைக்கணத்துடன் போகிற பக்கமெல்லாம் பந்தா காட்டி வருகிறாராம் அஸ்வின் குமார். இதன் காரணமாக ஒரு பெரிய பட வாய்ப்பை அவர் கையை விட்டுப் போய் விட்டதாம்.
முன்னதாக வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதி இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக முதலில் ஒப்பந்தமானவர் அஸ்வின்குமார் தான். ஆனால் கிருத்திகா உதயநிதியிடம் கொஞ்சம் பந்தா காட்டி நடந்து கொண்டாராம் அஸ்வின்.
இதன் காரணமாக அந்த பட வாய்ப்பு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் கிடைக்க போராடிக்கொண்டிருக்கும் வாரிசு நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமுக்கு சென்று விட்டதாம். சமீபத்தில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பாவ கதைகள் என்ற வெப்சீரிஸில் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.