விஜய் த்ரிஷா இணைந்து நடித்த 5 படங்கள்.. 20 வருடங்களாக தொடரும் கெமிஸ்ட்ரி

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அவர்கள் ஹீரோவாகத் தான் நடிப்பார்கள். ஆனால் இதற்கு இணையாக தற்போது வரை த்ரிஷா ஹீரோயின் ஆகவே நடித்து வருகிறார். அதிலும் விஜய்யுடன் தொடர்ந்து ஐந்து படங்கள் நடித்து இருக்கிறார். இவரோட கெமிஸ்ட்ரி 20 வருடங்களாகவே ஒர்க் அவுட் ஆகிறது என்றே சொல்லலாம். இவர்கள் இணைந்து நடித்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

கில்லி: தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் தான் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த முதல் படம். இவர்கள் நடித்த முதல் படத்தின் மூலமே இவர்களுடைய கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 நாட்களுக்கு மேல் ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. அத்துடன் விஜய்யின் கேரியரில் மிகச் சிறந்த படமாக ஆனது. இப்படத்தின் மூலம் த்ரிஷாவிற்கும் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

Also read: அசால்டாக ஐம்பதை தொட்ட விஜய் சேதுபதி.. விஜய், அஜித் இடத்துக்கு வரும் ஆபத்து

திருப்பாச்சி: பேரரசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு திருப்பாச்சி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய், த்ரிஷா, பசுபதி மற்றும் யுகேந்திரன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அண்ணன் தங்கை செண்டிமெண்ட் மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் விஜய் த்ரிஷா அவர்கள் காதல் அழகாக காட்டப்பட்டிருக்கும். இந்த திரைப்படம் திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடி வணிக ரீதியாக வெற்றி அடைந்தது.

ஆதி: இயக்குனர் ரமணா இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு ஆதி திரைப்படம் வெளிவந்தது. இதில் விஜய் ,த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் விவேக் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் மூலம் இவர்கள் மூன்றாவது முறையாக ஜோடி போட்டு நடித்தார்கள். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை எஸ் ஏ சந்திரசேகர் தயாரித்தார்.

Also read: லியோ படப்பிடிப்பில் கடுப்பான லோகேஷ்.. விஜய்யிடம் ஸ்டிரிக்டா போட்ட கண்டிஷன்

குருவி: தரணி இயக்கத்தில் குருவி திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதில் விஜய், த்ரிஷா, விவேக் ஆகியோர் நடித்திருப்பார்கள். இப்படத்தை கில்லி படத்தை இயக்கிய தரணி தான் இயக்குகிறார் என்பது தெரிந்த பிறகு இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யவில்லை. ஆனாலும் இது பாக்ஸ் ஆபிஸில் சராசரிக்கும் மேல் வசூலை பெற்றது. அதே மாதிரி வெளிநாட்டு பாக்ஸ் ஆபிஸில் அதிக அளவில் வெற்றி பெற்றது.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் த்ரிஷா 16 வருடங்கள் கழித்து மறுபடியும் விஜய்க்கு ஜோடியாக இணைகிறார். அத்துடன் இவர்களை பார்க்கும் பொழுது எப்பொழுதுமே எவர்கிரீன் ஜோடியாக தான் இருக்கிறார்கள். இவர்களுடைய ஜோடியை மறுபடியும் திரையில் பார்ப்பதற்கு ஆவலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படம் இந்த வருட இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: லோகேஷ் படத்தில் நடிக்க மறுத்த 2 டான்ஸ் மாஸ்டர்கள்.. கடைசியில் விஜய் சேதுபதியிடம் தஞ்சம் அடைந்த இயக்குனர்

Next Story

- Advertisement -