சன் டிவிக்கு கோட் படத்தை கொடுக்கக் கூடாதுன்னு சொன்னதே விஜய் தான்.. ஆடிப்போன ஏஜிஎஸ்

Vijay: கோட் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவிக்கு கொடுக்கவில்லை தயாரிப்பு நிறுவனமாகிய ஏஜிஎஸ். இதற்கு பின்னால் விஜய் தான் முக்கியமான நபராக இருந்துள்ளார். அவர் தான் சன் டிவிக்கு கொடுக்காதீங்கன்னு ஏஜிஎஸ்-க்கு ஆர்டர் போட்டு இருக்கிறார்.

ஏற்கனவே 52 கோடிகளுக்கு சன் டிவி இந்த படத்தை விலை பேசி உள்ளது. ஆனால் ஏஜிஎஸ் 80 கோடிகள் வரை பேரம் பேசி உள்ளது. மிகக் குறைந்த விலைக்கு கேட்டதால் சன் டிவிக்கு கொடுக்கவில்லை என பேச்சுக்கள் அடிபட்டது, ஆனால் அதற்கு பின்னால் விஜய் தான் இருந்திருக்கிறார்.

இப்பொழுது ஜி தொலைக்காட்சிக்கு 75 கோடிகளுக்கு கோட் படத்தின் சேட்டிலைட் உரிமைகளை ஏஜிஎஸ் விற்றுள்ளது. சன் டிவி போட்ட சில கண்டிசன்களால் விஜய் இந்த படத்தை அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என ஏஜிஎஸ் இடம் கூறி இருக்கிறார்.

சன் டிவி போட்ட கண்டிஷன்கள்

சன் டிவி இந்த படத்திற்காக ஒரு பிரம்மாண்ட ஆடியோ லான்ச் வைக்க வேண்டும் என கட்டளை போட்டுள்ளனர். அதுபோக விஜய் இரண்டு மணி நேரம் சன் டிவிக்கு பிரத்தியோக பேட்டி ஒன்றும் கொடுக்க வேண்டுமாம். அதை அவர்கள் புரொமோஷனுக்காக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கனவே பீஸ்ட் படத்திற்கு சன் டிவி இப்படி செய்திருந்தது. அது சென்டிமெண்டாக ஒர்க் அவுட் ஆகவில்லை. விஜய் ஆடியோ லாஞ்சுக்கு கூட சம்மதித்து விட்டார் ஆனால் இரண்டு மணி நேரம் பேட்டிக்கு நோ சொல்லிவிட்டார்.

Next Story

- Advertisement -