வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

எவ்வளவு பெரிய தூண்டில் போட்டாலும் சிக்காத ரெட் ஜெயன்ட்.. லியோவுக்கு லலித் போடும் தப்பு கணக்கு

Leo-Red Giant: லியோ ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சோசியல் மீடியா முழுவதும் அது குறித்த செய்திகள் தான் நிறைந்து இருக்கிறது. ரசிகர்களும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்து வரும் வேளையில் நேற்று அதன் ட்ரெய்லரும் ஆரவாரமாக வெளியானது.

அது விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஃபேமிலி ஆடியன்ஸை பொருத்தவரை அதிகபட்ச வன்முறையை அவர்கள் ரசிக்கவில்லை. இதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. இந்த சூழலில் தயாரிப்பாளர் லலித் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு பெரிய தூண்டில் ஒன்றை போட்டு இருக்கிறாராம்.

Also read: விஜய்யின் பேச்சை மீறி நடக்கும் அநியாயம்.. அடுத்த முதல்வர் தளபதியா, உதயநிதியா.? குளிர் காயும் ப்ளூ சட்டை

அதாவது லியோவிற்கான தியேட்டர் உரிமை 100 கோடி அளவுக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதுவரை எந்த படத்திற்கும் இந்த அளவுக்கான வியாபாரம் நடந்ததே கிடையாது. ஆனால் தமிழக தியேட்டர் உரிமம் மட்டும் இன்னும் விற்கப்படாமலேயே இருக்கிறது.

எதற்காக என்று விசாரித்ததில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இந்த உரிமையை வாங்கிக் கொள்வார்கள் என்று தயாரிப்பாளர் புது கணக்கு ஒன்றை போட்டு இருக்கிறாராம். ஆனால் இந்த வலையில் சிக்காத திமிங்கலமாக அவர்கள் ஆட்டம் காட்டி வருகின்றனர். இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

Also read: ஓடனும், ஒளியனும் பயந்து பயந்து சாகனும், வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர்

பொதுவாக ரெட் ஜெயன்ட் தியேட்டர் உரிமையை வாங்கும் பொழுது காசு கொடுக்க மாட்டார்கள். படம் ரிலீஸ் ஆனவுடன் கிடைக்கும் லாபத்தில் 10 சதவீதத்தை எடுத்துக் கொண்டு மீதியை தயாரிப்பாளரிடம் கொடுத்து விடுவார்கள். இதனால்தான் லலித் இப்போது யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

இருப்பினும் இதற்கான சுமூகமான தீர்வு விரைவில் கிடைக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தயாரிப்பாளரே படத்தை வெளியிட்டாலும் சென்னையின் சில முக்கிய ஏரியாக்களின் உரிமை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு தான் செல்லும் என்ற பேச்சும் இப்போது எழுந்துள்ளது.

Also read: எஸ்ஏசி- இன் இந்த 5 படத்தால் பொம்பள சகிலா என அடைமொழி வாங்கிய விஜய்.. முகம் சுளிக்க வைத்த அடல்ட் அஸ்திவாரம்

- Advertisement -

Trending News