வில்லத்தனத்தில் அளவில்லாமல் போன விஜய் சேதுபதி.. எல்லாத்துக்கும் காரணம் இந்த அட்லீ தம்பி தான்

விஜய் சேதுபதி என்ற இவருடைய பெயரை வில்லன் சேதுபதி என்று மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவிற்கு தற்போது தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத ஒரு வில்லன் நடிகராக இவர் உருவெடுத்துள்ளார். ஒரு ஹீரோவாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தாலும் தற்போது இவரின் வில்லத்தனத்தை ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

அதற்கேற்றவாறு அந்த கேரக்டரும் இவருக்கு கனகச்சிதமாக பொருந்தி விடுகிறது. அந்த வகையில் இவர் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாகவும், விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார்.

அந்த வரிசையில் இவர் தற்போது அட்லி திரைப்படத்தில் வில்லனாக மாறியுள்ளார். தமிழில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் அட்லி இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

அதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் தான் விஜய் சேதுபதி ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்கிறார். முன்னதாக அந்த கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராணா நடிக்க இருந்தார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவருக்கு சில உடல் நலப் பிரச்சினைகள் இருந்த காரணத்தினால் தற்போது அவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்நிலையில் அட்லி அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதியை அணுகியுள்ளார்.

விஜய் சேதுபதியும் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் இதன் மூலம் அவர் பாலிவுட்டிலும் வில்லனாக களம் இறங்கியுள்ளார். மேலும் இந்த படம் வெளிவந்த பிறகு விஜய் சேதுபதிக்கு ஹிந்தியில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -