பறிப்போகும் மக்கள் செல்வன் பட்டம்.. மிமிக்ரி ஆர்டிஸ்ட்க்கு வாய்ப்புக்கொடுத்த பாவத்திற்கு அனுபவிக்கும் விஜய் சேதுபதி

அண்மைக்காலமாக தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் பேசப்படும் வசனங்களில் கெட்ட வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டும் பிரத்யேகமாக இணையத்தில் வைரலாகி, இதை பார்க்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சினிமாவில் பேசப்படும் இது போன்ற வார்த்தைகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பிறரிடம் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு சில படங்களில் கெட்ட வார்த்தைகள் இல்லாத வசனங்கள் இடம்பெற்றாலும், பல படங்களில் பிரதானமாக இது போன்ற வார்த்தைகள் பேசப்படுகிறது. முக்கியமாக முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ் உள்ளிட்டோரின் படங்களில் கெட்ட வார்த்தைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு சென்சாரில் பீப் சத்தம் பயன்படுத்தும் அளவிற்கு இவர்களது படங்களின் வசனங்கள் உள்ளது. இந்த லிஸ்டில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.

Also Read: தோல்வி பட இயக்குனரோடு கைகோர்க்கும் விஜய் சேதுபதி.. கதையே கேட்காமல் கொடுத்த வாக்குறுதி

அண்மையில் பாலிவுட் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் ஷாஹித் கபூர், ராஷி கண்ணா, ரெஜினா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பார்சி வெப் சீரிஸ் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பான் இந்திய மொழிகளில் வெளியானது. பிரபல ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியான இந்த வெப் சீரீஸ் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கள்ள நோட்டுகளை அடிக்கும் கும்பலை கையும், களவுமாக பிடிக்கும் போலிஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பு பேசப்படுகிறது.

இருந்தாலும் இப்படத்தில் இவர் பல இடங்களில் கெட்ட வார்த்தைகளை சரளமாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் இந்த கெட்ட வார்த்தைகள் ஏதும் படம் எடுக்கும்போது பேசப்படவில்லையாம், டப்பிங்கில் தான் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஹிந்தி மொழி டப்பிங்கை விஜய் சேதுபதி தனது குரலில் கொடுத்த நிலையில், இப்படத்தை ஹிந்தியில் பார்ப்போருக்கு அது போன்ற வார்த்தைகளில் பெரிதாக விஜய் சேதுபதி பேசவில்லையாம்.

Also Read: விஜய் சேதுபதியை லாக் செய்த விக்னேஷ் சிவன்.. கேலி கிண்டலுக்கு ஆளாகி வரும் பரிதாப நிலைமை

ஆனால் தமிழ் டப்பிங்கில் மட்டும் குறிப்பிட்ட கெட்ட வார்த்தைகள் சரளமாக விஜய்சேதுபதி குரலில் பேசப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் தமிழ் மொழி டப்பிங்கை விஜய் சேதிபதிக்கு பதிலாக பிரபல மிமிக்ரி ஆர்டிஸிட் டி.எஸ்.கே கொடுத்துள்ளார். இவர் தனது சமூக வலைதளத்தில் விஜய் சேதுபதி கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படத்தை அப்லோடு செய்து தனக்கு வாய்ப்புக்கொடுத்த விஜய் சேதுபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி கைகளால் எழுதிய வாழ்த்து மடலையும் அவர் பகிர்ந்த நிலையில், கட்டாயம் விஜய் சேதுபதி தான் இவரை இதுபோன்ற வார்த்தைகளில் பேசுமாறு வலியுறுத்தியிருப்பார் என்று தெளிவாக தெரிகிறது. இப்படி கெட்ட வார்த்தைகளை பேசி தான் சினிமாவில் பணம் சம்பாதிப்பவர்களுக்கு, எதற்கு மக்கள் செல்வன் பட்டம் என இணையத்தில் நெட்டிசன்கள் சரமாரியாக விஜய்சேதுபதியை வஞ்சித்து வருகின்றனர்.

Also Read:விஜய் சேதுபதி பெயரைக் சந்தி சிரிக்க வைத்த பிரபலம்.. கேடுகெட்ட வேலையை செய்த காமெடியன்

Next Story

- Advertisement -