மிஷ்கினுக்காக சூட்டிங்கை நிறுத்திய விஜய்சேதுபதி.. தலையில் துண்டை போட்ட தயாரிப்பாளர்

விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி கோலிவுட்டை தாண்டி பாலிவுட்டிலும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கத்ரீனா கைப்புடன் மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்த வருகிறார். இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் பாலிவுட் படத்தின் சூட்டிங்காக விஜய் சேதுபதி மும்பையில் தங்கி உள்ளார். இதனால் படக்குழு விஜய் சேதுபதிக்கு மும்பையில் பிரம்மாண்ட அப்பார்ட்மெண்டில் ஒரு பிளாட் கொடுத்துள்ளார்கள். இதற்காக தினமும் விஜய் சேதுபதிக்கு மட்டும் கிட்டத்தட்ட 30,000 செலவு ஆகுதாம்.

Also Read :தரமான படத்தோடு காணாமல் போன வெற்றி பட இயக்குனர்.. விஜய் சேதுபதி கூட மறந்த பரிதாபம்

அந்த அளவுக்கு அந்த ஹோட்டலில் விஜய் சேதுபதிக்கு சகல வசதியையும் செய்து கொடுத்துள்ளனர். வாரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் சென்னைக்கு வந்த செல்கிறாராம் விஜய் சேதுபதி. இந்த சமயத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கினின் 50வது பிறந்த நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதற்காக சென்னையில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திரையுலகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் இலக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ளனர். கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பிசாசு 2. இப்படத்தின் ரிலீஸுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது.

Also Read :செட் ஆகாத கேரக்டரில் நடித்து மூக்குடைந்த 5 ஹீரோக்கள்.. விஜய் சேதுபதிக்கு அடித்த லக்

ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இதனால் மிஷ்கனின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக விஜய் சேதுபதி மும்பையில் படக்குழுவிடம் அனுமதி கேட்டு இருந்தார்.

ஆரம்பத்தில் அவர்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டதால் அனுமதி தந்தார்கள். இதனால் கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் அதற்காக ஏற்பாடு செய்தது எல்லாம் வீணாக போய் உள்ளது. இதனால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் வந்துள்ளதாம்.

Also Read :அத்துமீறி ஆட்டம் போடும் விஜய் சேதுபதி.. வாலை ஒட்ட நறுக்கிய அட்லீ

Next Story

- Advertisement -