நான் நடிக்கும் படத்தை நானே பார்க்க மாட்டேன் எனக்கூறிய பிரபலம்.. இப்படி நடிச்சா யாரு தான் பார்ப்பா!

விஜய் சேதுபதி தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்தார். விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் செல்வன் என்ற பெயர் பெற்றுள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை, கருப்பன் போன்ற கிராமத்து திரைப்படங்களில் இவருடைய யதார்த்தமான நடிப்புக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. நானும் ரவுடிதான், சேதுபதி, 96 படங்கள் பெரிய வெற்றியை வாங்கி கொடுத்தது.

சுந்தரபாண்டி, சூது கவ்வும், மாஸ்டர் திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். ஹீரோ, வில்லன் என மாறி மாறி வித்தியாசமான பல நடித்துள்ளார். அனைவரும் அவரைக் கொண்டாடத் துவங்கிய நேரத்தில், எந்த ரோல் கிடைத்தாலும் தற்போது நடித்து வருகிறார்.

தற்போது மட்டும் 20 படங்களில் நடித்து வருகிறார். இதுமட்டுமல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிற மாஸ்டர் செப் என்ற சமையல் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார். இவரது திரைப்படம் அனபெல் சேதுபதி, லாபம் இப்போது வெளியாகி உள்ளது.

vijaysethupathi-cinemapettai-01
vijaysethupathi-cinemapettai-01

இதைத்தொடர்ந்து இவரது ரசிகர்கள் தியேட்டர், டிவி, ஓடிடி என எங்கு சென்றாலும் விஜய் சேதுபதி தான் இருக்கிறார் என்று டுவிட்டரில் மீம்ஸ் உருவாக்கி கலாய்த்து வருகின்றனர். தற்போது விஜய் சேதுபதி அளித்த பழைய பேட்டி வீடியோவையும், வடிவேலு காமெடி உடன் இணைத்து புதிய வீடியோவை உருவாக்கி பதிவிட்டுள்ளனர். இப்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் செம வைரலாகி வருகிறது.

அந்தப் பேட்டியில், நீங்கள் நடிக்கும் படங்களை நீங்கள் பார்ப்பதுண்டா என கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிக்கையாளர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி பதறிப்போய் இல்லை என்றார். ஆரம்ப காலக்கட்டத்தில் பார்த்தேன் இப்போது பார்ப்பதில்லை நான் நடித்த படங்களில் பாதி படங்களுக்கு மேல் நானே பார்த்ததில்லை என்றார்.

பாவம் அவருக்கே போர் அடிச்சிருச்சு போல,முழுசா பாத்திருந்தா செத்திருப்ப என வடிவேலு டயலாக்குகளை விதவிதமாக இணைத்து கமெண்டில் பதிவிட்டுள்ளனர். விஜய் சேதுபதி ஏன் இப்படி இறங்கிப்போய் கிடைக்கிற ரோல்களில் நடித்து வருகிறார் என ரசிகர்கள் சலிப்பாகவும், நீங்கள் நடிக்கிற படத்தை நீங்களே பார்க்கவில்லை என்றால், நாங்க எப்படி பார்ப்போம் என்று விஜய்சேதுபதியை கலாய்த்து வருகின்றார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்