விஜய்சேதுபதி படத்தை வாங்க மறுக்கும் தியேட்டர் முதலாளிகள்.. அவங்க சொல்ற காரணமும் சரி தான்.!

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். மாதத்திற்கு மூன்று படங்களை வெளியிடும் விஜய் சேதுபதி மேலும் பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதிக எண்ணிக்கையில் படம் நடித்தாலும் கதைகளை தேர்வு செய்வதில் கோட்டை விட்டு விடுகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியது. தொடர் தோல்வி காரணமாக விஜய் சேதுபதி படங்கள் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும். படங்களின் எண்ணிக்கையை பார்க்காமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதிக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்கி வருகிறார்கள்.

தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள கடைசி விவசாயி, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல 2 காதல் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. இதுதவிர விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகில் என்ற படமும் திரைக்கு வரவுள்ளது.

விஜய் சேதுபதி, ரெஜினா மற்றும் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள முகில் படத்தை வரும் அக்டோபர் 8ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட விஜய் சேதுபதி முடிவு செய்திருந்தார். ஆனால் தற்போது இதில் புதிதாக ஒரு சிக்கல் உருவாகியுள்ளது.

mukil-poster
mukil-poster

அதாவது விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள முகில் படத்தின் மொத்த நேரமே வெறும் 62 நிமிடங்கள் மட்டும் தானாம். எனவே இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால் படத்திற்கு இடைவேளை நேரம் மாறுபடுவது உள்ளிட்ட பல சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இப்படத்தை திரையரங்குகளில் வெளியிட மறுத்து விட்டார்களாம்.

இதனால் விஜய் சேதுபதி முகில் படத்தை எப்படி வெளியிடுவது என யோசித்து வருகிறாராம். இதனால் விஜய்சேதுபதி, ரெஜினா கசாண்ட்ரா நடித்த இந்த படம் OTT தளத்தில் வெளிவர அதிக வாய்ப்புகள் உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்