கமலிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி.. இவருக்கு இப்படி ஒரு ஆசையா ?

கமலஹாசன், விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். சமீபகாலமாக விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் இவருடைய பவானி கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் படத்திலும் வில்லனாக சந்தானம் கதாபாத்திரத்தில் போதைப்பொருள் கடத்தல்காரராக நடித்திருந்தார். ஒரு முன்னணி ஹீரோ இதுபோன்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

மேலும் கமலஹாசனுடன் நான் நடிக்க வேண்டும் என்று லோகேஷ் இடம் கேட்டு தான் விஜய்சேதுபதி இந்த வாய்ப்பை பெற்று இருந்தார். இந்நிலையில் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் பேசிய விஜய் சேதுபதி கமலிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது கமலஹாசனுடன் நடித்து ஆசையை தீர்த்துக் கொண்டார். இப்போது கமலஹாசன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது கமலஹாசன் ஒரு காட்சியை எப்படி நடித்து காட்டுகிறாரோ, அதை அப்படியே காப்பியடித்து நானும் நடிக்க வேண்டும் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

அவ்வாறு கமலஹாசன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக தான் இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் கமலஹாசன் தற்போது படங்களில் நடிப்பது மற்றும் தயாரிப்பில் அதிகமாக ஆர்வம் செலுத்தி வருகிறார். அதனால் தற்போது மீண்டும் படத்தை இயக்குவது கடினம்தான்.

மேலும் விஜய் சேதுபதியும் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.  தமிழ் படங்களை தாண்டி ஹிந்தி மொழி படங்களிலும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். இதனால் தற்போதைக்கு கமலஹாசன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது சாதாரண விஷயம் இல்லை.

Next Story

- Advertisement -