சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

மரண மொக்க இயக்குனருடன் மீண்டும் கூட்டணியில் விஜய் சேதுபதி.. பழக்கத்திற்காக எடுக்கப் போகும் மிகப்பெரிய ரிஸ்க்

Actor Vijaysethupathi: நெனச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என சொல்வது உண்டு. அது இப்போ விஜய் சேதுபதிக்கு தான் சரியாக இருக்கிறது. சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக ரவுண்டு வந்து கொண்டிருந்தவர், இப்போது தொடர்ந்து நெகடிவ் கதாபாத்திரங்களில் தான் நடிக்கிறார். அதற்கு மற்றும் ஒரு முக்கிய காரணம் ஆகவே இவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகின்றன.

இப்போது இருக்கும் முன்னணி ஹீரோக்கள் எல்லாம் சம்பளம், பட்ஜெட், மார்க்கெட், பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் சேதுபதி மட்டும் தான் வாய்ப்பு தேடிய காலங்களில் தனக்கு உதவியவர்கள், நண்பர்கள், அறிமுக இயக்குனர்கள் என அத்தனை பேருக்காகவும் இறங்கி படம் பண்ணுவதால் தான் இப்படி தோல்வி படங்களை சந்தித்திருக்கிறார்.

Also Read:வசூலில் பயத்தை காட்டிய ஷாருக்கான், பிரபாஸ்.. ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் தனுஷின் கேப்டன் மில்லர்

அப்படி விஜய் சேதுபதி நம்பி நடித்த ஒரு படம் மரண மொக்கையாக இருந்தது, இதுவரை வெளியான அவருடைய படங்களில் நம்பர் ஒன் பிளாப் படம் இதுதான் என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் பொன்ராம் உடன் விஜய் சேதுபதி இணைந்து பணியாற்றிய டிஎஸ்பி படம் தான் அது.

விஜய் சேதுபதி போலீஸ் கெட்டப்பில் நடித்ததும் சேதுபதி அளவுக்கு பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. தற்போது இவர் மீண்டும் பொன் ராம் உடன் இணைந்து பணியாற்ற இருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் மீண்டுமாய் என விஜய் சேதுபதியின் ரசிகர்களே கொந்தளித்து போய் இருக்கிறார்கள்.

Also Read:கமல் ஒருபோதும் ரஜினியாக முடியாது, விஜய் ஒருபோதும் அஜித்தாக முடியாது.! காரணம் இதுதான்

ஆனால் விஜய் சேதுபதி மீண்டும் பொன்ராம் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டதற்கு மிகப்பெரிய காரணமே வெற்றிமாறன் தானாம். படத்தை இயக்கப் போவது மட்டும்தான் நான், மற்றபடி கதை மற்றும் திரைக்கதை முழுக்க வெற்றிமாறன் தான் எழுதப் போகிறார் என்று சொல்லி தான் பொன் ராம் இந்த ப்ராஜெக்ட்டுக்கு ஓகே வாங்கி இருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதிக்கு எப்போதுமே வெற்றிமாறன் மீது ஒரு மிகப்பெரிய மரியாதை உண்டு. இதை விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் பகிர்ந்து இருந்தார். அதனால் தான் பொன்ராம் ப்ராஜெக்ட் க்கு ஓகே சொல்லி இருக்கிறார். விஜய் சேதுபதி நம்பி ரிஸ்க் எடுக்கும் விஷயம் அவருக்கு கை கொடுக்குறதா இல்லை வழக்கம் போல் காலை வருகிறதா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read:மின்னல் மாதிரி வந்து ஒரே படத்தில் காணாமல் போன 6 நடிகைகள்.. அஜித் விஜய்க்கு ஜோடி போட்டும் பிரயோஜனம் இல்லாத நடிகை

- Advertisement -

Trending News