வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

உயிருக்கு போராடும் குழந்தைக்காக உதவும் விஜய் சேதுபதி.. ஒரே பதிவால் குவியும் உதவித்தொகை

நாஞ்சிக்கோட்டை சுராஜ்பூர் நகரை சேர்ந்த ஜகதீஷ்,எழிலரசி தம்பதியரின் குழந்தை பாரதி. ஒன்னே முக்கால் வயதான இந்த குழந்தைக்கு மற்ற குழந்தைகள் போல எழுந்து நடக்க முடியாது. ஆரம்பத்தில் பாரதியின் பெற்றோர் இது சாதாரண பிரச்சினைதான் என்று பிசியோதெரபி சிகிச்சை அளித்து வந்துள்ளனர்.

பிறகுதான் தெரிந்தது முதுகு தண்டுவட தசைநார் நோய் ஏற்பட்டுள்ளது. இந்த நோய்க்கு இன்னும் 2 வாரத்திற்குள் ஊசி போட வேண்டும். இந்த ஊசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமாம் அந்த ஊசியின் விலை சுமார் 16 கோடி.

அந்த ஊசியை வாங்கும் அளவிற்கு பாரதியின் பெற்றோரிடம் வசதி இல்லை. இதனால் அரசிடமும்,மக்களிடமும் மகளை காப்பாற்றுங்கள் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பாரதிக்கு உதவ பலரும் முன்வந்துள்ளனர்.

விஜய் டிவி பிரபலங்கள் குக் வித் கோமாளி புகழ், கலக்கப்போவது யாரு அறந்தாங்கி நிஷா, சூப்பர் சிங்கர் செந்தில், ராஜலட்சுமி மற்றும் ரியோ ராஜ் ஆகியோர் பாரதிக்கு உதவி செய்யுமாறு பேசிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ட்விட்டரில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் பாரதிக்கு உதவி செய்ய விரும்புவோர் பணம் அனுப்ப வேண்டிய வங்கி கணக்கு,கூகுள் பே, போன் பே ஆகிய விவரங்கள் கொடுத்திருக்கிறார்கள். இந்த ட்வீட்டை பார்த்த பலரும் பாரதிக்கு உதவ முன்வந்துள்ளனர். விஜய்சேதுபதி பதிவு

vjs-savebharathi-1
vjs-savebharathi-1

விஜய் சேதுபதியின் இந்த ட்வீட்டை பார்த்த சிலர் உங்களின் ஒரு படத்தின் சம்பளத்தை கொடுத்தாலே அந்த குழந்தை காப்பாற்றப்படும் என்று விஜய் சேதுபதி விமர்சித்துள்ளனர்.

vjs-twit-reply
vjs-twit-reply
- Advertisement -

Trending News