பிளாப் இயக்குனருக்கு 40 நாள் கால் சீட் கொடுக்க முடியாது.. பணத்தைப் பார்த்து வாயை பிளந்த விஜய் சேதுபதி

கோலிவுட்டில் சகட்டுமேனிக்க எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடித்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு தற்போது கதாநாயகனாக நடித்தால் மட்டும் ஒர்க் அவுட் ஆகாமல் போகிறது. ஆனால் வில்லன் ஆகவும் குணசத்திர வேடங்களிலும் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகிறது.

இதனால் அவரை கோலிவுட் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகமே முரட்டு வில்லனாக அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பிளாப் இயக்குனருக்கு 40 நாள் கால் சீட் கொடுக்க முடியாது என கறாராக பேசிய விஜய் சேதுபதி, அதன் பின் அந்த இயக்குனர் பணத்தை விட்டு எறிந்ததும் கால் சீட் கொடுத்திருக்கிறார்.

Also Read: விரைவில் உருவாக உள்ள அரண்மனை 4.. பிரபல ஹீரோவை வளைத்து போட்ட சுந்தர் சி

சுந்தர் சி இயக்கத்தில் கடைசியாக வெளியான காபி வித் காதல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று ப்ளாப் ஆனது. இதனால் மீண்டும் தன்னுடைய ஹிட் படங்கள் ஆன அரண்மனையின் அடுத்த பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அரண்மனை படத்தை சுந்தர் சி இயக்கிய இருந்தார்.

இதைத்தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் ஹிட்டடித்த நிலையில் அரண்மனை 4 படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்திற்காக மாஸ் ஹீரோவை சுந்தர் சி தேர்வு செய்துள்ளார். அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும் சந்தானம் ரீ என்ட்ரி காமெடி நடிகராகவும் நடிக்க இருக்கிறார்கள்.

Also Read: தளபதி 67 விஜய் சேதுபதி இடத்தை பிடிக்கும் விக்ரம்.. மீண்டும் பயத்தில் விஜய்

சுந்தர் சி இந்த படத்திற்கு விஜய் சேதுபதி இடம் தொடர்ந்து 40 நாள் கால்ஷீட் கேட்க தர மறுத்தார் விஜய் சேதுபதி. பின்னர் எவ்வளவு பணம் வேண்டும் அதை தருகிறேன் என்று கூறி விஜய் சேதுபதி இடம் அந்த கால்சீட்டை வாங்கி விட்டார் இயக்குனர்.

தொடர்ந்து 40 நாள் காசிித் தர முடியாது ரொம்ப பிசி எனக் கூறிய விஜய் சேதுபதி. அதிக பணத்தை தரேன் என்று சொன்னதும் உடனே வாயை பிளந்து கால்ஷீட் கொடுத்து விட்டார். பணம் கொடுத்தால் எப்படி வேணாலும் நடிப்பின் யார் படத்தில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்ற கொள்கையில் இருக்கிறார் விஜய் சேதுபதி.

Also Read: மாநகரம் ஹீரோவுக்கு பல கோடி முதலீடு செய்த லோகேஷ்.. ரத்தக் களரியில் அதிர வைத்த மைக்கேல் டிரைலர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை