Connect with us
Cinemapettai

Cinemapettai

michale-trailer-vijay-sethypathy

Videos | வீடியோக்கள்

மாநகரம் ஹீரோவுக்கு பல கோடி முதலீடு செய்த லோகேஷ்.. ரத்தக் களரியில் அதிர வைத்த மைக்கேல் டிரைலர்

ரத்தக் களரியுடன் வெளிவந்துள்ள மைக்கேல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வைரலாகி வருகிறது.

ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கம் மட்டுமின்றி தயாரிப்பு, படங்களை வாங்கி வெளியிடுவது என மிகவும் பிசியாக இருக்கிறார். அந்த வகையில் இப்போது அவர் மாபெரும் கூட்டணியில் உருவாகி இருக்கும் மைக்கேல் திரைப்படத்தை வெளியிட இருக்கிறார். அந்த படத்தின் டிரைவர் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது.

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன், விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதுவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த சந்திப் கிஷன் தற்போது சிறு இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் இறங்கியுள்ளார்.

Also read: கமல், கார்த்தி படத்தில் இணைய போகும் விஜய்.. லோகேஷ் கனகராஜின் அடுத்த பிளான் இதுதானா!

அந்த வகையில் இப்போது வெளியான ட்ரெய்லரே படு மிரட்டலாக இருக்கிறது. காதை துளைக்கும் துப்பாக்கிச் சத்தம், அதிரடி சண்டை காட்சிகள் என ட்ரைலர் பயங்கர ரத்த களரியாக இருக்கிறது. அது மட்டுமல்லாமல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் விஜய் சேதுபதி, கௌதம் மேனன் என அனைவரும் ட்ரைலரிலேயே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்கள்.

மைக்கேல் ஆக வரும் சந்தீப் கிஷன் ஆக்ஷன் காட்சிகளில் மட்டுமல்லாமல் ரொமான்ஸ் காட்சியிலும் தெறிக்க விட்டுள்ளார். மேலும் படத்தின் கதை இதுதான் என்று யூகிக்க முடியாத அளவுக்கு காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக ட்ரெய்லர் வெளிவந்துள்ளது. இதுவே படத்தின் மீதான ஆவலையும் தூண்டி இருக்கிறது.

Also read: தளபதி 67 கதையை செதுக்கி வைத்திருக்கும் லோகேஷ்.. ஆங்கில பட தழுவலாக இருந்தாலும் வேற லெவல்

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் தன் பட ஹீரோவுக்காக பல கோடி முதலீடு செய்து இந்த படத்தை வெளியிடுகிறார். அவருடைய நம்பிக்கையை இந்த படம் நிச்சயம் காப்பாற்றும் என்று தெரிகிறது. வரும் பிப்ரவரி 3ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் எந்த அளவுக்கு வசூல் வேட்டை ஆடும் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Continue Reading
To Top