கோடியில் மிதக்கும் மக்கள் செல்வன்.. எல்லாம் திறமைக்கு வர பணப்பெட்டி தான்

விஜய் சேதுபதி காசுக்காக எங்கு வேண்டுமானாலும் நடிப்பேன் என்ற நோக்கத்தில் கையில் கிடைக்கும் திரைப்படத்திற்கெல்லாம் கமிட்டாகி வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி, சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளார்.

இதனிடையே தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார். ஏற்கனவே விஜய் சேதுபதி தமிழில் வில்லனாக நடிப்பதற்கு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நிலையில், ஹீரோவாக நடிப்பதை விட வில்லனாக நடிப்பதற்கு இரட்டிப்பு சம்பளம் என்பதால், அதனை பயன்படுத்தி பல திரைப்படங்களில் வில்லனாக மட்டுமே விஜய்சேதுபதி நடித்து, தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து வருகிறார்.

இதனிடையே ஹிந்தி மொழியில் வெளியாகவுள்ள வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க விஜய் சேதுபதி கமிட்டாகி இருந்த நிலையில், கிட்டத்தட்ட 35 கோடி வரை சம்பளமாக பெற்று நடித்துள்ளார். பார்சி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், நடிகை ராஷி கண்ணா,உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பொதுவாகவே முன்னணி நடிகர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதையே சிறந்ததாக நினைப்பர், ஆனால் விஜய் சேதுபதி பணத்திற்காக எங்கு வேண்டுமானாலும் நடிப்பேன் என்ற நோக்கத்தில் தன்னை மேம்படுத்தி வருகிறார். ஏற்கனவே தமிழில் இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலர் இயக்கிய நவரசா வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் முதல் முறையாக ஹிந்தி மொழியில் பார்சி வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

மேலும் ஹிந்தியில் 4 திரைப்படங்களில் கமிட்டாகியுள்ள விஜய் சேதுபதி ஒவ்வொரு படத்திற்கும் 40 கோடிக்கு மேல் சம்பளம் பெற்றுள்ளார் என்ற தகவலும் அண்மையில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் பாகம் இரண்டில் விஜய் சேதுபதி போலீஸ் உயரதிகாரியாக நடிக்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படி பணத்திற்காக கையில் கிடைக்கும் அனைத்து திரைப்படத்திற்கும் கமிட்டாகி வருவது பலருக்கும் வியப்பை ஆழ்த்தியுள்ளது. மேலும் ஹீரோவாக நடிப்பதை சற்று ஓரம்கட்டிவிட்டு வில்லனாக மட்டுமே அதிக திரைப்படங்களில் நடித்து நன்றாக சம்பாரிக்கலாம் என்ற நோக்கத்தில் அதிக சம்பளம் கொடுக்கும் படத்திலேயே விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

- Advertisement -