பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துள்ள தளபதியின் சித்தி.. இம்புட்டு நாளா இது தெரியாம போய்டுச்சே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது சொந்தக்காரரான விக்ராந்த் கவன் மற்றும் தொண்டன் போன்ற பல படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு 2. இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல நாட்களாக விஜய்யின் சித்தியான விக்ராந்தின் அம்மா ஷீலா பிரபல சீரியலில் ஒன்றில் நடித்துள்ளார். ஆனால் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமலே இருந்துள்ளது. தற்போது விஜயின் சித்தியை சமூக வலைதளங்களில் இருக்கும் சினிமா ரசிகர்கள் கண்டறிந்து இந்த தகவலை வைரல் ஆக்கி வருகின்றன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகருடன் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் ஷீலா தமிழ் மட்டுமின்றி மலையாளம் போன்ற பல படங்களிலும் சிறிய கதாபாத்திரம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்