வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஒரே ஒரு நாள் கால்சீட் கொடுத்த விஜய்.. டீ கூட குடிக்காமல் படப்பிடிப்பை நடத்தப்போகும் பிரபலம்

விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. விஜய் பல வருடங்களுக்கு பிறகு குடும்ப பாங்கான கதையில் நடித்துள்ளார். அதனால் வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. அதனால் இவர்களது கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் மற்றும் அட்லி இருவரும் இணைந்து பல படங்கள் பணியாற்றியுள்ளனர். இவர்களது கூட்டணியில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அப்போதிலிருந்து விஜய்க்கு அட்லீ நெருங்கிய நண்பனாக உள்ளார்.

தற்போது அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய் அக்ஷய்குமார் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார். தற்போது ஷாருக்கானுடன் விஜய் நடிக்க உள்ளார்.

அட்லி செப்டம்பர் மாதம் 25 நாட்கள் ஜவான் படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளார். அதனால் ஷாருக்கான் சென்னையில் வந்து நடிக்க உள்ளார். அட்லி விஜய்யிடம் ஜவான் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். விஜய் ஒரு நாள் கால்ஷீட் தருவதாக கூறியுள்ளார்.

அதற்கு அட்லி அது போதும்  எனக்கூறிவிட்டு டீ கூட குடிக்காமல் படப்பிடிப்பை நடத்தி முடித்து விடுவேன் எனக் கூறியுள்ளார். விஜயும் ஷாருக்கானும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றால் கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் எனக் கூறியுள்ளனர்.

- Advertisement -

Trending News