ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ரஜினியை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் விஜய்.. லிஸ்டிலேயே இடம்பெறாத அஜித்

ஆசியாவின் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் பெயர் வெளியாகியுள்ளது. அதில் தென்னிந்தியாவில் விஜய் முதலிடத்தில் உள்ளார். தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் தளபதி விஜய்க்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது இதன்மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் தீபாவளி, பொங்கல் அன்று அவருடைய ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காகவே எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளிப்பார். அவருடைய ரசிகர்களும் தளபதி விஜயின் படம் ரிலீஸ் ஆகும்போது திரையரங்கில் விழா கோலம் போல் குவிந்து தாறுமாறாக தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்துவார்கள்.

இப்படி எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் விஜய்யை கூகுள் மூலம் ஆசியாவில் தேடப்பட்ட பெயர்களின் முதல் 100 பேரில் விஜய் 22-வது இடத்தைப் பிடித்து தமிழ் நடிகர்களில் முதல் ஆளாக நிற்கிறார். மேலும் தனுஷ் 61-வது இடத்தை பிடித்து தமிழ் நடிகர்களில் ஆசியாவில் அதிகம் தேடப்பட்டவர்களின் பெயரில் இரண்டாமிடத்தில் இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து சூர்யா 63-வது இடத்தைப் பிடித்து தமிழ் நடிகர்களில் மூன்றாவது இடத்தில் நிற்கிறார். 77-வது இடத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார் தமிழ் நடிகர்களை பொறுத்தவரை ரஜினி நான்காமிடத்தில் இடத்தைப் பெற்றிருக்கிறார். இந்த லிஸ்டில் அஜித்தின் பெயர் இடம்பெறவில்லை.

தென்னிந்திய கதாநாயகிகளாக காஜல் அகர்வால், ராஷ்மிகா மந்தனா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், தமன்னா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். கன்னட ராக்கிங் ஸ்டார் யாஷ் தெலுங்கு பிரபலங்களான அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர், ராம் சரண், மகேஷ் பாபு உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் மட்டுமல்ல  பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, கஜோல், தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், ரன்பீர் கபூர் உள்ளிட்டோரும் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளனர். இதில் தல அஜித் மற்றும் இடம்பெறாதது தல ரசிகர்களை வெறுப்பேற்றி இருக்கிறது.

top-google-search-celebrity
top-google-search-celebrity-cinemapettai
- Advertisement -

Trending News